search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krystyna Pyszkova"

    • உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறை இந்தியா வென்று உள்ளது.
    • 2024-ம் ஆண்டு உலக அழகி போட்டியில் கிறிஸ்டினா பிஸ்கோவா மகுடம் சூடியுள்ளார்.

    மும்பை:

    71-வது உலக அழகி போட்டி கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லியில் தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நேற்று மும்பையில் நடந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக அழகி போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியை இந்தி திரைப்பட இயக்குனர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் இணைந்து நடத்தினர். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 117 பேர் பங்கேற்றனர்.

    இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்றனர். இந்தியா, மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, செக் குடியரசு, இந்தோனேசியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்ச்சுகல், லெபனான், போட்ஸ்வானா, கவுதமாலா நாடுகளை சேர்ந்த அழகிகளும் தகுதி பெற்றனர்.

    இந்நிலையில், செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024-ம் ஆண்டுக்கான 71-வது உலக அழகி பட்டத்தை வென்றார்.

    லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார்.

    இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2022-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தைச் சூட்டினார்.

    இந்தியா சார்பில் பங்கேற்ற சினி ஷெட்டி போட்டியின் முதல் 4 இடங்களுக்குள் வர முடியவில்லை. சினி ஷெட்டி 2022-ம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார். உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறை இந்தியா வென்றுள்ளது.

    உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்டினா பிஸ்கோவா சட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×