என் மலர்
கேரளா
- பிரியங்கா காந்தி வருகிற 23-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
- நவ்யா ஹரிதாஸ் கோழிக்கோடு மாநகராட்சியில் பா.ஜ.க. தலைவராக உள்ளார்.
திருவனந்தபுரம்:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப்பிர தேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல்காந்தி, வய நாடு தொகுதி எம்.பி. பதவி யை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது.
அடுத்த மாதம் (நவம்பர்) 13-ந் தேதி அங்கு வாக்குப் பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற 23-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
மனு தாக்கலுக்கு முன்னதாக அன்றைய தினம் அவர், தனது சகோதரரும், நாடாளு மன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தியுடன் வயநாட்டில் ரோடுஷோவில் பங்கேற்கிறார்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டிய நிலையில், பா.ஜ.க சார்பில் களம் இறங்கப் போவது யார்? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் வயநாடு தொகுதி வேட்பாளராக கட்சியின் மாநில மகளிர் அணி தலைவர் நவ்யா ஹரிதாசை, பா.ஜ.க. அறிவித்துள்ளது.
வயநாடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நவ்யா ஹரிதாஸ், தற்போது கோழிக்கோடு மாநகராட்சியில் பா.ஜ.க. தலைவராக உள்ளார்.
2 முறை இந்த மாநகராட்சியில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட அவர், கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அகமது தேவர்கோவிலிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது அவர் மீண்டும் தேர்தல் களம் இறங்க உள்ளார்.

36 வயதான நவ்யா ஹரிதாஸ், பி.டெக் என்ஜினீயர் ஆவார். பா.ஜ.க.வில் வளர்ந்து வரும் பெண் தலைவராக கருதப்படும் இவர், கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சியினரிடம் நன்மதிப்பை பெற்றுள்ளார்.
வேட்பாளராக அறிவிக்கப் பட்ட நவ்யா ஹரிதாஸ் கூறுகையில், வயநாட்டில் உள்ள மக்களுக்கு சில முன்னேற்றம் தேவை. ராகுல்காந்தி வயநாட்டு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வில்லை.
வயநாடு மக்களுக்கு அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் தேவை. உள்ளூர் நிர்வாகத்தின் பின்னணியுடன் பொது சேவையில் எனக்கு அனுபவம் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அரசியல் துறையில் மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். அவர்களுடன் எப்போதும் இருந்து வருகிறேன் என்றார்.
வயநாடு தொகுதியில் கம்யூனிஸ்டு சார்பில் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார். எனவே அங்கு தற்போது மும்முனை போட்டி நிலவுகிறது.
- மகர விளக்கு சீசனுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி நடை திறக்கப்படுகிறது.
- பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. ஐயப்பனை தரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.
இந்த மாத பூஜையில் சபரிமலையில் வரலாறு காணாத கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. மாத பூஜை நாட்களில் வழக்கமாக பக்தர்கள் கூட்டம் வலிய நடை பந்தல் வரை மட்டுமே இருக்கும். ஆனால் தற்போது பக்தர்கள் சரம் குத்தி வரை (2 கி.மீ தூரத்திற்கு) நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்க நிமிடத்திற்கு 80 முதல் 90 பக்தர்களை 18-ம் படி வழியாக கொண்டு சென்றால் மட்டுமே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். ஆனால் தற்போது அதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
பொதுவாக மாத பூஜை சமயத்தில் சபரிமலையில் பாதுகாப்பு பணிக்கு குறைவான போலீஸ் மட்டுமே நியமிக்கப்படுவார்கள். அதன்படி தற்போது 170 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த போலீசாரால் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை.
இதனால் பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 18-ம் படிக்கு கீழ் வாவரு நடை, கற்பூர ஆழி மற்றும் மகாகாணிக்கை பெட்டியை சுற்றியுள்ள பகுதியில், எப்போதும் கூட்ட நெரிசல் இருந்து கொண்டே இருக்கிறது.
மாத பூஜையில் வரலாறு காணாத கூட்டம் குவிந்ததை சமாளிக்க முடியாமல் போனதற்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படாததே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இனி மண்டல, மகர விளக்கு சீசனுக்காக அடுத்த மாதம் 15-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த சீசன் காலங்களில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீசனையொட்டி இந்த ஆண்டு தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேர தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் உடனடி தரிசன முன்பதிவு மூலம் தினசரி 70 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் என 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சொல்கிறது.
முதலில் முன்பதிவு மூலம் தினமும் 80 ஆயிரம் பேரும், உடனடி முன்பதிவு முறையில் கோவிலுக்கு தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். இதனால் லட்சக்கணக்கானோர் குவிந்ததால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் பக்தர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் கூட அவதிக்குள்ளானார்கள். இதுதவிர ஐயப்ப பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் அரசின் மீது கூறப்பட்டது.
அதே சமயத்தில் உடனடி முன்பதிவு மூலம் அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்பட்டதால் தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என அரசு கருதியது. எனவே இந்த முறை முதலில் உடனடி முன்பதிவு ரத்து அறிவிப்பும், பின்னர் பக்தர்களின் எதிர்ப்பால் ரத்து அறிவிப்பு வாபசும் பெறப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கையால் பக்தர்கள் குழப்பம் அடைந்தனர். மேலும் முன்பதிவு முறைக்கு 80 ஆயிரம், உடனடி முன்பதிவு முறைக்கு 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் தற்போதைய குழப்பமான அறிவிப்பு மற்றும் கடந்த மண்டல பூஜை சமயத்தில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதியில் குளறுபடி போன்ற காரணத்தால் சீசன் காலத்தில் நிம்மதியாக ஐயப்பனை தரிசிக்க முடியாது என நினைத்த பக்தர்கள், முன்கூட்டியே இந்த ஐப்பசி மாத பூஜைக்கு ஒருசேர ஐயப்பனை தரிசனம் செய்ய குவிந்தனர். இதனால் மாத பூஜையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது.
- சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
- சன்னிதானம் முதல் சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர்.
திருவனந்தபுரம்:
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. நேற்று முன்தினம்(17-ந்தேதி) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்த நிலையில், இன்று பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது.
சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. சன்னிதானம் முதல் சரங்குத்தி வரை பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர். பக்தர்களை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தி அனுப்பவும் போதிய போலீசார் இல்லாததே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
- பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
- வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆனி ராஜா போட்டியிட்டார்.
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி எம்.பி. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரு தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த 15-ந்தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகின்றனர். பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடப்போவது யார்? என்பதை அந்த கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.
தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்கள். ஓரிரு நாளில் பாரதிய ஜனதா வேட்பாளர் யார்? என்பது தெரிந்துவிடும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை அடுத்த வாரம் தொடங்குகிறார். இதற்காக அவர் வருகிற 22-ந்தேதி கேரளா வருகிறார். மறுநாள் (23-ந்தேதி) வேட்பு மனுவை தாக்கல் செய்யும் அவர், பின்பு பிரசாரத்தை தொடங்க உள்ளார்.
அவர் வயநாடு தொகுதியில் 10 நாட்கள் வரை பிரசாரத்தில் ஈடுபடலாம் என்று கூறப்படுகிறது. அப்போது பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும் வந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வர இருப்பதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
வயநாடு தொகுதியில் சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்திக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஆனி ராஜா போட்டியிட்டார். தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் பிரியங்கா காந்திக்கு எதிராக கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 25-ந்தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வேட்புமனுவை திரும்பப்பெற வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நவம்பர் 13-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ந்தேதி நடைபெறுகிறது.
- தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
- இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்கினர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி தேர்தல் நடைபெற்றது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அந்த தொகுதிக்கு வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 15-ந்தேதி வெளியானது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்கினர். அவர்கள் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியின் படங்கள் அடங்கிய பிரசார போஸ்டர்கள் மற்றும் பேனர்களை அமைத்தனர். மேலும் பிரசாரம் மேற்கொள்வதற்கான ஆயத்த பணிகளையும் தொடங்கினர்.

தேர்தல் பணிகளை தொடங்குவதில் காங்கிரஸ் கட்சியினர் முதலில் களமிறங்கிய நிலையில், தேர்தல் களம் காண இருக்கும் பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியையே மேற்கொண்டு வந்தது.
இந்தநிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை இடது ஜனநாயக முன்னணி நேற்று மாலை அறிவித்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சத்யன் மொகேரி போட்டியிடுகிறார். இவர் கடந்த 1987-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை 3 முறை கண்ணூர் மற்றும் நாதாபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
2014-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினர். இந்தநிலையில் தற்போது அவருக்கு வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், பாரதிய ஜனதா மட்டும் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது. இடைத்தேர்தலில் யாரை நிறுத்துவது? என்று தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.
வேட்பாளர் தேர்வுக்கான இறுதி பட்டியில் கட்சியின் தலைமையிடம் கொடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பட்டியலில் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரது பெயர் இடம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இடைத்தேர்தலில் போட்டியிட யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்? என்பது ஓரிரு நாளில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
- காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குகிறார்.
- கட்சி மேலிடம் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும், அந்த பொறுப்புக்கு 100 சதவீதம் சிறப்பாக நடந்துகொள்வேன்.
புதுடெல்லி:
கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து, அந்த தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுச்செயலாளர் பிரியங்கா களம் இறங்குகிறார்.
அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் நடிகை குஷ்பு களம் இறங்கவுள்ளதாக நேற்று இரவு பரபரப்பு தகவல் வெளியானது. பா.ஜ.க. உத்தேச வேட்பாளர் பட்டியலில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக மலையாள செய்தி சேனல்களில் நேற்று தகவல் வெளியானது.
இதுகுறித்து குஷ்புவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
தேர்தல் என்று வந்தாலே போதும், இதுபோல வதந்திகள் பரவத்தான் செய்கின்றன. எல்லா தேர்தல்களிலும் இந்த வதந்திகள் எழத்தான் செய்கின்றன. இப்போதும் அதுபோலவே ஒரு வதந்தி பரவுகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் பா.ஜ.க. சார்பில் நான் போட்டியிட போவதாக பேசப்படுகிறது.
இதுவரை அந்த மாதிரி ஒரு தகவல் குறித்து கட்சி மேலிடம் என்னிடம் பேசவில்லை. கட்சி மேலிடம் எனக்கு என்ன பொறுப்பு கொடுத்தாலும், அந்த பொறுப்புக்கு 100 சதவீதம் சிறப்பாக நடந்துகொள்வேன்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
- நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
- கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பான முறையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
திருவனந்தபுரம்:
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. நேற்று காலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 5 நாள் நடைபெறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு கோவில் நடை 21-ந்தேதி இரவு அடைக்கப்படும்.
இந்தநிலையில், சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசன அனுமதி வழங்கப்படும். உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சீசன் நாட்களில் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பான முறையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் விபத்தில் மரணம் அடைய நேரிட்டால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்படும். இதற்கான பிரீமியம் தொகையினை காப்பீட்டு நிறுவனத்திற்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் செலுத்தும். விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கான செலவு தொகை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினசரி கூலி தொழிலாளர்கள் ஆகியோர் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது.
- பிரசார வியூகம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. இதில் 18 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளும், பாரதிய ஜனதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவர் ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததை தொடர்ந்து, அவர் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
அதேபோன்று செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியிலும், பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
அவர்கள் இருவரும் எம்.பி.க்களாக பதவியேற்றனர். இதனால் செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன. இதனால் கேரளாவில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்தன.
வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கேரள மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (18-ந்தேதி) தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்து விட்டது. இதனால் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அவர்கள் தொகுதியில் பிரியங்கா காந்தி படங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டத் தொடங்கியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தொகுதி முழுவதும் பேனர்களை அமைத்து வருகின்றனர். மேலும் பிரசார வியூகம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள். 2009-ம் ஆண்டு முதல் வயநாடு தொகுதி காங்கிரசின் கோட்டையாக இருந்து வருகிறது.
அதனை தக்க வைத்துக் கொள்ளவும், பிரியங்கா காந்தி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையிலும் தேர்தல் பணியாற்ற காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்திருக்கின்றனர். அதற்கு தகுந்தாற் போல் வியூகம் வகுத்து வருகிறார்கள்.
வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் போட்டியிடுகின்றன. அந்த கட்சிகள் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்னும் இறுதி செய்யவில்லை. அவர்கள் யாரை நிறுத்துவது? என்று கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகின்றனர்.
கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் விவரம் இன்று தெரியவரும் எனவும், பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விவரம் ஓரிரு நாளில் தெரிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகு பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கும் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்து விட்டது.
பாலக்காடு தொகுதியில் ராகுல் மம்கூட்டத்தில், செலக்கரா தொகுதியில் முன்னாள் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் இருவரும் விரைவிலேயே பிரசாரத்தை தொடங்க உள்ளனர்.
இந்த தொகுதிகளில் பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களும் ஓரிரு நாளில் அறிவிக்கப்பட்டு விடும். அதன்பிறகு அந்த தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கும்.
- பந்தளம் அரண்மனை குழந்தைகள் ரிஷிகேஷ் வர்மா, வைஷ்ணவி ஆகியோர் புதிய நம்பூதிரிகளுக்கான சீட்டை எடுத்தனர்.
- கொல்லம் சக்திகுளங்கரா பகுதியை சேர்ந்த இவர் ஆட்டுக்கல் கோவிலின் முன்னாள் மேல்சாந்தி ஆவார்.
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கான மேல்சாந்திகள் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். அதேபோல் இந்த ஆண்டும் புதிய மேல்சாந்திகள் தேர்வு நடந்தது. தேர்வு பட்டியல் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 25 பேரும், மாளிகைபுரம கோவிலுக்கு 15 பேரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு சபரிமலையில் இன்று நடந்தது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, கண்டரரு பிரம்மதத்தன், தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் அஜிகுமார், சுந்தரேசன், சிறப்பு ஆணையர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் குலுக்கல் நடந்தது.
பந்தளம் அரண்மனை குழந்தைகள் ரிஷிகேஷ் வர்மா, வைஷ்ணவி ஆகியோர் புதிய நம்பூதிரிகளுக்கான சீட்டை எடுத்தனர். அதில் அய்யப்பன் கோவில் மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். கொல்லம் சக்திகுளங்கரா பகுதியை சேர்ந்த இவர் ஆட்டுக்கல் கோவிலின் முன்னாள் மேல்சாந்தி ஆவார்.
இதேபோன்று மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். இவர் கோழிக்கோட்டை சேர்ந்தவர் ஆவார். புதிய மேல்சாந்திகள் இருவரும் நவம்பர் 15-ந்தேதி பதவியேற்றுக் கொள்வார்கள்.
- மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
- வருகிற 21-ந் தேதி வரை சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
திருவனந்தபுரம்:
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு பிரம்மதத்தன், கண்டரரு ராஜீவரு ஆகியோர் தலைமையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார்.
அதைதொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 21-ந் தேதி வரை நடை திறந்து ஐப்பசி மாத சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். முன்னதாக இன்று காலை சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு குலுக்கல் மூலம் நடைபெறுகிறது.
சித்திரை ஆட்டத்திருநாள் சிறப்பு பூஜைகளுக்காக வருகிற 30-ந் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். மறுநாள் 31-ந் தேதி சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.
அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் மண்டலகால பூஜைகளுக்காக அடுத்த மாதம் 15-ந் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.
- வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தார்
- கேரள மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.
திருவனந்தபுரம், அக்.16
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதில் 18 தொகுதிகளின் காங்கிரஸ் கூட்டணி கட்சி களும், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவர் தனது தாய் சோனியா காந்தியின் தொகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட நிலையில் அங்கும் வெற்றிபெற்றார். இரண்டு தொகுதிகளில் ஒன்றை மட்டுமே தேர்தெடுக்க வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் வட மாநிலங்களில் காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்தில் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டது.
மேலேயும் மக்களவை தேர்தலில் கேரளாவில் 2 எம்.எல்.ஏ.க்.கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதாவது செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கி ரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்கள் இருவரும் எம்.பி.க்களாக பதவியேற்றனர். இதனால் செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளும் காலியான தாக அறிவிக்கப்பட்டன.
வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளும் 4 மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்ததால், அந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற சூழல் நிலவியது.
இந்தநிலையில் வயநாடு மக்களவை தொகுதி, பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புடன் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதன்படி அந்த 3 தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கேரள மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. நாளைமறுநாள் வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது. அரசியல் கட்சியினரும் இடைத்தேர்த லுக்கு தயாராக தொடங்கி விட்டனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது.
வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில், அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று இரவு வெளியாகியுள்ளது.
இதனால் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் பாலக்காடு மற்றும் செலக்கரா சட்ட சபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.
தொடர்ந்து வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்காகாந்தி பிரசா ரத்தில் ஈடுபட கேரளாவுக்கு வருகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட ராகுல்காந்தியும் வர உள்ளார். மற்ற காட்சிகள் யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.
வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பதால், அவருக்கு கடும் போட்டியாக இருக்கும் வகையில் வேட்பாளரை களமிறக்க பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்துள்ளன. பாலக்காடு சட்டசபை தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் வசம் இருந்தது.
அதனை மீண்டும் தனதாக்கிக்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டு தேர்தல் பணி களை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் செலக்கரா தொகுதியை மீண்டும் தனதாக்கிக்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் வேட்பாளர்களை களமிறக்க இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இவர்களுக்கு மத்தியில் பாஜகவும் வேட்பாளர்களை களமிறக்குகிறது.
- 2008-ம் ஆண்டு நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு தொடர்பு இருக்கிறது.
- மதானி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி (வயது58). கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவர், 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருக்கிறது. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மூச்சு விட சிரமப்படுவதால், அவருக்கு வென்டிலேட்டர் உதவுயுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.






