என் மலர்
இந்தியா
வயநாட்டில் அண்ணனை மிஞ்சிய தங்கை... 3.68 லட்சம் வாக்குகள் முன்னிலையில் பிரியங்கா காந்தி
- வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,02,849 வாக்குகள் பெற்றுள்ளார்.
கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தெட் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைத்தேர்தல் நடந்தது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களமிறங்கி உள்ளார். முதல் முறையாக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்துள்ள அவர் வெற்றிக்கனியை பறிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். அவர் காலை 9.45 மணி நிலவரப்படி 51,930 வாக்குகளை பெற்றார். அதன்பின்பு பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியின் விளம்பில் பிரியங்கா காந்தி உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி 5,57,451 வாக்குகளை பிரியங்கா காந்தி பெற்றுளார். அவர் கிட்டத்தட்ட 3,68,319 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சத்யன் மோகேரி 1,89,132 வாக்குகளும், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,02,849 வாக்குகளும் பெற்றுள்ளனர்.