கேரளாவில் நகைக்கடை உரிமையாளரிடம் 3.5 கிலோ தங்கம் கொள்ளை- 4 பேர் கைது

தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட மலப்புரத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நகைக்கடை உரிமையாளரிடம் 3.5 கிலோ தங்கம் கொள்ளை- 4 பேர் கைது
Published on

கேரளாவில் நகைக்கடை உரிமையாளரை தாக்கி 3.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

நேற்று இரவு நகைக்கடை உரிமையாளர் யூசுப் தனது சகோதரருடன் நகைக்கடையை மூடிவிட்டு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த கும்பல் இருவரையும் தாக்கி, பைக்கில் வைத்திருந்த 3.5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்ட மலப்புரத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரவீன், விஜின், சதீசன், நிகில் ஆகியோரிடம் தங்கம் இல்லாததால் மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com