என் மலர்
குஜராத்
- விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பிரதமர் மோடி சந்தித்து நலம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
- பிரதமர் மோடி அகமதாபாத் விமான நிலையத்தில் உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அகமதாபாத் விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று பிரதமர் மோடி சந்திதார். சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான ரமேஷ் விஷ்வாஸ் குமாரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்ட பிரதமர் மோடி, அகமதாபாத் விமான நிலையத்தில் உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், அதிகாரிகள் பங்கேற்றனர். மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக அவர் ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில் அகமதாபாத் விமான விபத்து தொடர்பான மீட்பு பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இருந்து கருப்பு பெட்டியை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர். கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்த்தால்தான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதும், விமான விபத்துக்கான காரணமும் தெரியவரும்.
- விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னதாக அவர் அந்த வழியாக குதித்ததன் காரணமாக அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.
- கண், நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் காயம் அடைந்த ரமேஷ் அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில், அதில் பயணித்த 241 பயணிகள் பலியாகிவிட்ட நிலையில், அந்த விமானத்தில் பயணித்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற வாலிபர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
விமானம் வெடித்து சிதறியதால் அதில் பயணித்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கருதப்பட்ட நிலையில், விஷ்வாஸ் குமார் தப்பியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
விமானத்தில் இருந்து குதித்து அவர் உயிர் தப்பி உள்ளார். அவருக்கு முகம், கால்கள், மார்பு உள்ளிட்ட உடலில் பல இடங்களில் காயம் இருப்பதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரமேஷ் அமர்ந்திருந்த இருக்கை விமானத்தில் இருந்து உடைந்து விழுந்ததால் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. பலத்த காயம் அடைந்த அவர், அகமதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு சென்று, விமான விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இதையடுத்து விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபரான ரமேஷ் விஷ்வாஸ் குமாரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
- விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
- மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட AI-171 விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள்.
மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதில் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தநிலையில் AI-171 விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க பிரதமர் மோடி அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வந்தார். விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, மத்திய இணையமைச்சர் முரளிதர் மொஹோல் மற்றும் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி ஆகியோர் இருந்தனர்.
இதையடுத்து அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.
- கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
- கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர்.
விபத்தில் விமானத்தின் பெரும்பகுதி தீயில் முற்றிலும் எரிந்துவிட்டதால் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டியில் பதிவாகி இருக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்த்தால்தான், கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பதும், விபத்துக்கான காரணமும் தெரியவரும். எனவே அந்த கருப்பு பெட்டியை கைப்பற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், விமானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும், அகமதாபாத், மும்பை, டெல்லி மற்றும் கேட்விக் விமான நிலையங்களில் உதவி மையங்களை ஏர் இந்தியா அமைத்துள்ளது. இந்த மையங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அகமதாபாத்திற்கு பயணிக்கு உதவும்.
இந்தியாவிற்குள் இருந்து அழைப்பவர்களுக்கான பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்: 1800 5691 444; மற்றும் வெளிநாடுகளில் இருந்து அழைப்பவர்களுக்கான பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்: +91 8062779200.
மேலும் (https://x.com/airindia) மற்றும் http://airindia.com ஆகியவற்றில் உடனடியாக தகவல்களை பெறலாம் என தெரிவித்துள்ளது.
- விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உயிரிழந்துள்ளார்.
- விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து நேற்று மதியம் லண்டன் புறப்பட்ட விமானம், சில நிமிடங்களில் அங்குள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த 241 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் ஒருவர் உயிர் தப்பினார்.
இந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உயிரிழந்துள்ளார்.
அகமதாபாத்தில் 242 பேருடன் சென்று விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானம் டாடா நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். எனவே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
உலகையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தலைவர்கள் கடும் அதிர்ச்சி வெளியிட்டு உள்ளனர்.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி இன்று காலை செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர்.
- பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
அகமதாபாத்:
அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்துள்ளனர். விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பல்வேறு நாட்டுத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் விமானத்தில் பூமி சவுகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருந்தார். இதற்காக அவர் வாகனத்தில் தனது வீட்டில் இருந்து சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் நோக்கி புறப்பட்டார்.
ஆனால் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றார். இதனால் அவர் உயிர் தப்பினார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், விமான விபத்தை அறிந்தவுடன் உடல் நடுங்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியவில்லை என தெரிவித்தார்.
- விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர்.
- இந்த விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது.
விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள். 6 பேர் போர்ச்சுகலை சேர்ந்தவர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 14 குழந்தைகள் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் குஜராத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார்
இந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அகமதாபாத் விமான விபத்தில் பயணம் செய்த 241 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ளது.
- மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
- குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
அகமதாபாத்:
ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடம் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இன்று மதியம் ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்தில் சிக்கியது. அதில் பல பயணிகள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நாடு முழுவதும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஒன்றாக நிற்கிறது.
விபத்து நடந்த 10 நிமிடங்களுக்குள் மத்திய அரசுக்கு தகவல் கிடைத்தது. குஜராத் முதல் மந்திரி, உள்துறை மந்திரி மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து மந்திரியை நான் தொடர்பு கொண்டேன். சிறிது நேரத்திலேயே பிரதமரும் அழைத்தார்.
அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள் இருந்தனர்.
இந்த விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்துள்ளது நல்ல செய்தி. டிஎன்ஏ சரிபார்ப்புக்குப் பிறகு இறப்பு எண்ணிக்கை அறிவிக்கப்படும். உயிர் பிழைத்த ஒருவரை நான் சந்தித்தேன்.
ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. விமானம் கிட்டத்தட்ட 1,25,000 லிட்டர் எரிபொருளை எடுத்துச் சென்றது. அதிக வெப்பநிலை காரணமாக யாரையும் காப்பாற்ற வாய்ப்பில்லை.
நான் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன். இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்த உடல்களின் டி.என்.ஏ மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. டி.என்.ஏ சோதனைகளுக்குப் பிறகு உடல்கள் ஒப்படைக்கப்படும். மறுஆய்வுக் கூட்டத்தில், ஒவ்வொரு அம்சமும் விவாதிக்கப்பட்டது. விசாரணையை விரைவாக மேற்கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து மந்திரி அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.
- இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளோம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 204 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
ஏர் இந்தியா தலைவர் சந்திரசேகரன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்," இந்த விபத்து எனது தொழில் ரீதியான வாழ்க்கையில் மிகவும் மோசமான நாளாக அமைந்துவிட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவித்துள்ளோம். போயிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியிடம் பேசி இருக்கிறேன். சிறந்த நிபுணர்களை அனுப்பி வைக்கக் கேட்டுள்ளேன்" என்றார்.
- இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து வீடியோவாக பதிவு வெளியிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், அதே விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் நோக்கி பயணம் செய்த பயணி ஆகாஷ் வத்ஷா என்பவர் ஏர் இந்தியா விமானத்தின் நிலை குறித்து வீடியோவாக பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில் அவர்," அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான அதே விமானத்தில்தான் டெல்லியில் இருந்து 2 மணி நேரத்துக்கு முன்பாக அகமதாபாத் வந்தேன். விமானத்தில் இருந்தபோது ஏதோ தவறாக நிகழ்வதை உணர்ந்தேன்.
இந்த விமானத்தில் வழக்கத்துக்கு மாறான அம்சங்கள் இருந்ததைக் கவனித்தேன். விமானத்தில் இருந்த டிவி டிஸ்பிளே உள்ளிட்ட எதுவும் முறையாக வேலை செய்யவில்லை.
கேபின் குழுவை அழைக்கும் பொத்தான், விளக்கு பொத்தான்களும் வேலை செய்யவில்லை.
இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் பகிர்ந்தேன்" என்றார்.
- ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
- விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணித்த ஒருவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணித்த ஒருவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
ஏர் இந்தியா விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த அஜய் குமார் ரமேஷ் (40) உயிர் தப்பியுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மார்பு, கண் உள்ளிட்ட இடங்களில் ரமேஷூக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
- காயமடைந்த சுமார் 50 பேர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்டுள்ளனர்.
- சிவில் மருத்துவமனை அகமதாபாத் இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது.
விமான விபத்து குறித்து குஜராத் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தனஞ்சய் திவேதி கூறியதவாது:-
அகமதாபாத் விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் சிவில் மருத்துவமனை மாணவர் விடுதி, ஊழியர்கள் குடியிருப்புகள் மற்றும் பிற குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன.
அந்தப் பகுதியில் வசிப்பவர்களும் காயமடைந்தனர். காயமடைந்த சுமார் 50 பேர் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்டுள்ளனர்.
அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பி.ஜே. மருத்துவத்தில் டி.என்.ஏ சோதனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே விமானப் பயணிகளின் குடும்பங்கள் மற்றும் நெருங்கியவர்கள், குறிப்பாக அவர்களின் பெற்றோர் மற்றும் குழந்தைகள், அந்த இடத்தில் தங்கள் மாதிரிகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள். பயணிகளின் உறவினர்கள் மற்றும் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட பிற காயமடைந்தவர்கள் ஏதேனும் விசாரணை செய்ய வேண்டுமானால், சிவில் மருத்துவமனை அகமதாபாத் இரண்டு ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்த உதவிக்கும் , 6357373831 மற்றும் 6357373841 இந்த எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






