என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்ஜித்த சிங்கம், மரண எல்லைக்குச் சென்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்- வீடியோ
    X

    கர்ஜித்த சிங்கம், மரண எல்லைக்குச் சென்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்- வீடியோ

    • அடர்ந்த காட்டில் சிங்கம் அருகே சென்று செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர்.
    • திடீரென சிங்கம் அந்த வாலிபரை நோக்கி வந்ததால் அச்சம்.

    குஜராத் மாநிலம் பவ்நகரில் வாலிபர் ஒருவர், சிங்கம் அருகே சென்று சொல்போனில் வீடியோ எடுத்தபோது, சிங்கம் கர்ஜித்து அவரை நோக்கி சீறிப்பாய முயற்சித்த வீடியோ வெளியாகி, அந்த வாலிபர் நெட்டிசன்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    குஜராத் மாநிலத்தில் உள்ள பவ்நகரில் உள்ள அடர்ந்த காட்டில் சிங்கம் ஒன்று, தன்னுடைய இரையை மகிழ்ச்சியாக சாப்பிட்டு பசியாற்றிக் கொண்டிருந்தது. அதை பார்த்த வாலிபர் ஒருவர் சிங்கத்தை அருகில் சென்று படம் பிடிக்க விரும்பினார்.

    சிங்கம் இரையை சாப்பிட்டு அமர்வதை, அந்த வாலிபர் அருகில் மெல்ல மெல்ல நடந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். திடீரென அந்த வாலிபர் சிங்கத்தின் பார்வையில் தென்பட்டார். என்னப்பா இவன் தொல்லை கொடுக்கிறானே, என்று எண்ணிய அந்த சிங்கம் திடீரென கர்ஜித்துக் கொண்டு அவரை நோக்கி வந்தது. ஆனால் அந்த நபர் பயந்து ஓடாமல் ஒவ்வொரு அடியாக பின்வாங்கி வீடியோ எடுத்துக் கொண்டே வந்தார்.

    சில அடிகள் முன்னேறி வந்த சிங்கம் என்ன நினைத்ததோ தெரியவில்லை, அப்படியே திரும்பியது. இதனால் அந்த வாலிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார். ஒருவேளை சீறிப் பாய்ந்திருந்தால் அந்த வாலிபர் நிலை என்னாயிருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சம் ஏற்படுகிறது.

    அந்த வாலிபரின் செயலுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×