என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத்தில் சிரியா நபர் கைது: காசாவுக்காக நிதி திரட்டி ஆடம்பர வாழ்க்கை நடத்தியது அம்பலம்..!
    X

    குஜராத்தில் சிரியா நபர் கைது: காசாவுக்காக நிதி திரட்டி ஆடம்பர வாழ்க்கை நடத்தியது அம்பலம்..!

    • டூரிஸ்ட் விசா மூலம் கொல்கத்தாவிற்கு கடந்த ஜூலை மாதம் வந்துள்ளனர்.
    • கொல்கத்தாவில் இருநது ஆகஸ்ட் 2ஆம் தேதி அகமதாபாத்திற்கு வந்து நன்கொலை வசூலில் ஈடுபட்டுள்ளனர்.

    காசாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு நிதி திரட்டுவதாக கூறி, மசூதிகளில் நன்கொடை பெற்று ஆடம்பர வாழ்க்கை நடத்திய சிரியா நாட்டைச் சேர்ந்தவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் தங்கியிருந்த மற்ற நபர்களை பிடிக்க லுக்அவுட் நோட்டீஸ் வெளியீட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட சிரியாவைச் சேர்ந்த அலி மெகத் அல்-அசார் (23) உடன் மேலும் மூன்று பேர் சிரியா நாட்டில் இருந்து டூரிஸ்ட் விசா மூலம் கடந்த ஜூலை 22ஆம் தேதி கொல்கத்தா வந்துள்ளனர். அங்கிருநது ஆகஸ்ட் 2ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்துள்ளனர்.

    அகமதாபத்தில் ஒரு ஓட்டலில் நான்கு பேரும் தங்கியுள்ளனர். அவர்கள் நான்கு பேரும் அங்குள்ள மசூதிகளுக்கு சென்று நாங்கள் காசாவில் பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்கான நன்கொடைழ வசூலிக்கிறோம். தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு கேட்டுள்ளனர்.

    காசா மக்கள் வறுமையில் வாடும் போட்டோ மற்றும் வீடியோக்களை காட்டி வசூலில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைக்க போலீசார் சோதனை செய்தபோது, அலி மெகத் அல்-அசார் மட்டும் போலீசாரிடம் மாட்டியுள்ளார். மற்றவர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் போலீசார் தேடிவருகின்றனர்.

    அல்-அசாரிடம் இருந்து போலீசார் 3600 அமெரிக்க டாலர் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் காசாவிற்கு எந்தவிதமான நிதியும் அனுப்பவில்லை. நன்கொடை பெற்ற பணத்தில் ஆடம்பர வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

    மேலும், அவர்கள் என்ன நோக்கத்திற்கான இந்தியா வந்துள்ளனர் என அகமதாபாத் கிரைம் பிராஞ்ச் போலீசார் குஜராத் பயங்கரவாத தடுப்புக் குழு மற்றும் என்ஐஏ உடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×