என் மலர்
டெல்லி
- மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?
- அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உச்சநீதிமன்றத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகம் மற்றும் காப்பக (NJMA) திறப்பு விழாவின் போது இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் ஏஐ (AI) வழக்கறிஞரை அறிமுகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து இந்தியாவில் மரண தண்டனை குறித்த கேள்வியைக் கேட்டு ஏஐ வழக்கறிஞரின் அறிவை சோதிக்க தலைமை நீதிபதி முடிவு செய்தார். "இந்தியாவில் மரண தண்டனை அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா?" என்று தலைமை நீதிபதி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த ஏஐ வழக்கறிஞர், "ஆம், இந்தியாவில் மரண தண்டனை என்பது அரசியலமைப்புச் சட்டம். இது உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்ட அரிதான வழக்குகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அங்கு குற்றம் மிக கொடூரமாக இருக்கும் போது அத்தகைய தண்டனைக்கு உத்தரவாதம் அளிக்கிறது" என்று கூறியது.
இந்த பதில் சந்திரசூட் மற்றும் மற்ற வழக்கறிஞர்களை கவர்ந்தது. அருங்காட்சியக திறப்பு விழாவில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "இந்த அருங்காட்சியகத்தின் கருத்தாக்கம் மற்றும் திட்டமிடலுக்கு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் எடுத்ததாக கூறினார். இந்த அருங்காட்சியகம் நம் தேசத்தின் வாழ்க்கைக்கு நீதிமன்றத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது."
"இங்குள்ள எனது சகாக்கள் அனைவரின் சார்பாகவும், இந்த அருங்காட்சியகத்தை இளைய தலைமுறையினருக்கு இந்த அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்," என்று கூறினார்.
தற்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் 65 வயதை எட்டியவுடன் பதவியில் இருந்து விலக உள்ளார். இதற்கு மறுநாளான நவம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சீவ் கண்ணா பதவியேற்க உள்ளார்.
- முன்னணி இந்திய நன்கொடையாளராக ஷிவ் நாடார் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளார்.
- ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.407 கோடி நன்கொடையுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியல் மற்றும் இந்திய நன்கொடையாளர் பட்டியல் போன்றவற்றை ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் ஆண்டுக்கு ரூ. 2,153 கோடி நன்கொடைகள் வழங்கி முன்னணி இந்திய நன்கொடையாளராக தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஹுருன் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு அவர் சராசரியாக ரூ.5.7 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார். 79 வயதான அவர் 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நன்கொடையாளர்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் அறக்கட்டளை ரூ.407 கோடி நன்கொடையுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பஜாஜ் குழும அறக்கட்டளை 352 கோடி ரூபாய் நன்கொடையுடன் 3 ஆம் இடத்தில் உள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் CSR நன்கொடையில் ரூ.900 கோடி பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து நவீன் ஜிண்டால் தலைமையிலான ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனம் ரூ. 228 கோடி நன்கொடையுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது.
இன்ஃபோசிஸின் இணை நிறுவனரும், நந்தன் நிலேகனியின் மனைவியுமான ரோகினி நிலேகனி, ஆண்டுக்கு 154 கோடி ரூபாய் நன்கொடையுடன் அதிக நன்கொடைகள் அளித்த பெண்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
- வழிதவறி வந்த மாடு ஒன்று அப்பெண்ணை தாக்கி கீழே தள்ளியது.
- மாட்டின் கொம்புகளை அப்பெண் கெட்டியாக பிடித்தார், இதனால் மாடு சிலநொடிகள் அமைதியாக இருந்தது.
டெல்லியில் குறுகலான பாதையில் சென்ற கொண்டிருந்த பெண்ணை மாடு ஒன்று கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் அக்டோபர் 30 அன்று டெல்லியில் உள்ள ஆயா நகரில் நடந்துள்ளது.
பெண் ஒருவர் டெல்லியின் குறுகலான பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வழிதவறி வந்த மாடு ஒன்று அப்பெண்ணை தாக்கி கீழே தள்ளியது. அச்சமயத்தில் துணிச்சலாக செயல்பட்ட அப்பெண் மாட்டின் கொம்புகளை கெட்டியாக பிடித்தார். இதனால் மாடு சில நொடிகள் தாக்க முடியாமல் அமைதியாக இருந்தது.
மாட்டின் கொம்புகளை பிடித்தபடியே அப்பெண் கூச்சலிட்டதை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாட்டை விரட்ட முயன்றனர். இதனையடுத்து மாடு அங்கிருந்து ஓடியது. மாடு தாக்கியதில் அப்பெண் பலத்த காயமடைந்தார்.
தெருவில் சுற்றி வரும் மாடுகள் அவ்வப்போது மனிதர்களை தாக்கும் நிகழ்வுகள் இந்தியாவில் தற்போது அதிகரித்துள்ளன. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, தெருவில் சுற்றி திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்தனர்.
டெல்லியில் அதிகரித்துள்ள சட்டவிரோத பால்பண்ணைகள் தான் தெரு மாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம். சட்டவிரோத பால்பண்ணைகளின் உரிமையாளர்கள் தங்கள் மாடுகளை பால் கறந்த பிறகு தெருவில் விட்டு விடுகிறார்கள். தெருவில் சுற்றி திரியும் மாடுகளால் சாலை விபத்துகள் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் பொதுமக்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- வெளிப்படைத்தன்மை மற்றும் பாகுபாடு இல்லாதது பொது ஆட்சேர்ப்பு செயல்முறையின் தனிச்சிறப்பாக இருக்க வேண்டும்.
- தேர்வு விதிகள் தன்னிச்சையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பின் 14-வது பிரிவின்படி இருக்க வேண்டும்.
அரசு வேலைக்கான ஆட்சேர்ப்பு தொடர்பான வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபகள் கொணட பெஞ்சு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வேலைக்கான ஆட்சேர்ப்பு விதியை பாதி வழியில் மாற்ற முடியாது. அதாவது ஆட்சேர்ப்புக்கான நடைமுறைகள் தொடங்கியபின் பரிந்துரைக்கப்படாவிடில் மாற்ற முடியாது என நீதிபதிகள் ஒருமித்த கருத்து அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தேர்வு விதிகள் தன்னிச்சையாக இருக்கக் கூடாது. அரசியலமைப்பின் 14-வது பிரிவின்படி இருக்க வேண்டும் என பெஞ்ச் தெரிவித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பாகுபாடு இல்லாதது பொது ஆள்சேர்ப்பு செயல்முறையின் தனிச்சிறப்பாக இருக்க வேண்டும் என்றும், நடுநிலையில் விதிகளை மாற்றுவதால் விண்ணப்பம் செய்தவர்கள் ஆச்சரியப்படக்கூடாது எனவும் பெஞ்ச் தெரிவித்துள்ளது.
- பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, நாட்டின் பாதுகாப்பு கோட்டையை வலுப்படுத்த அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தும்.
- மாநாட்டில் உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இரண்டு நாள் பயங்கரவாத தடுப்பு மாநாடு இன்று தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய உள்துறை மந்திரி அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
சிறிதும் சகித்து கொள்ளாத கொள்கையோடு பயங்கரவாதம் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. இரண்டு நாள் பயங்கரவாத தடுப்பு மாநாடு நாளை (இன்று) தொடங்குகிறது.
நாளை தொடங்கும் இரண்டு நாள் பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு, நாட்டின் பாதுகாப்பு கோட்டையை வலுப்படுத்த அமைப்புகளிடையே ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தும். நாளை மாநாட்டில் உரையாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
- பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
- திறமையான மாணவர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும்.
புதுடெல்லி:
பிரதமரின் வித்யாலட்சுமி திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் திறமைவாய்ந்த மாணவர்கள் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்காக நிதியுதவியை வழங்கும்.
இந்தத் திட்டத்தின் மூலமாக கல்வி கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளின் முழு தொகையையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பிணையில்லாமல் கல்வி கடனாக பெற முடியும்.
தேசிய நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருக்கும் அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு இந்தத் திட்டம் பொருந்தும்.
இந்நிலையில், வித்யாலட்சுமி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மந்திரி அஸ்வினி, நாட்டில் எந்தவொரு இளைஞரும் தரமான உயர்கல்வியை தொடர்வதை நிதி பிரச்சனைகள் தடுக்கக் கூடாது என்பதற்கான திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான பிரதமரின் வித்யாலட்சுமி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார்.
- மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது.
- அத்துடன் 14 மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபைக்கான தேர்தலுடன் 14 மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதையடுத்து, தேர்தல் அறிவிப்பு வெளியான தேதியில் இருந்து தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.558 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பரிசு பொருட்கள், மதுபானம், போதை பொருட்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.
மகாராஷ்டிராவில் மட்டும் ரூ.280 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் இருந்து ரூ.158 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும்போது தேர்தல் நடக்கும் 2 மாநிலங்களிலும் சேர்த்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் 3.5 மடங்கு அதிகரித்துள்ளது.
- டொனால்டு டிரம்ப் 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார்.
- கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270-க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
டொனால்ட் டிரம்ப் உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். அமெரிக்க அதிபராக நீங்கள் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.
எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிப்பெற கமலா ஹாரிஸ்க்கும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
- டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் ரசாயன நுரை மிதந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரல்.
சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.
இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.
இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி காலிந்தி கஞ்ச் பகுதியில் ரசாயன நச்சு நுரை மிதந்து செல்லும் மாசடைந்த யமுனை ஆற்றில் பெண்கள் சத் பூஜைகாக நீராடியுள்ளனர்.
ரசாயன நுரையுடன் யமுனை ஆற்றில் பெண்கள் நீராடிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், டெல்லியில் உள்ள யமுனை ஆற்றில் பொதுமக்கள் நீராட டெல்லி அரசு தடை விதித்தது.
இந்த தடையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவை நிராகரித்த நீதிமன்றம், யமுனை நதி மிகவும் மாசடைந்து இருப்பதால் அங்கு நீராடும் மக்களுக்கு உடல் நலப்பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது ஆதலால் பாதுகாப்பான இடங்களில் சத் பூஜை கொண்டாடுங்கள் என்று கருத்து தெரிவித்தது.
- தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் பங்கேற்றனர்.
- தற்போது வரை 4 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், மீதமுள்ள நீரையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தல்.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 35வது கூட்டம், ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூடியது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் பங்கேற்றனர்.
அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நவம்பர் மாதத்திற்கான 15.79 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட கர்நாடகத்திற்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை 4 டிஎம்சி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், மீதமுள்ள நீரையும் திறக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நிர்ணயிக்கப்பட்டதைவிட கூடுதல் நீர் திறக்கப்பட்டதால், நீர் திறக்க உத்தரவிடக் கூடாது என கர்நாடக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
- கார் ஓட்டுவதற்கு இலகுரக மோட்டார் வாகனம் (LMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
- லாரி ஓட்டுவதற்கு கனரக மோட்டார் வாகனம் (HMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் வைத்திருக்கும் நபர்கள் 7,500 கிலோ எடைக்கு மிகாமல் இருக்கக்கூடிய போக்குவரத்து வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கார் உள்ளிட்ட 4 சக்கர வானங்களை ஓட்டுவதற்கு இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும். அதே சமயம் லாரி போன்ற பெரிய கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு கனரக மோட்டார் வாகன (HMV) லைசன்ஸ் எடுக்க வேண்டும்.
இலகுரக மோட்டார் வாகன லைசன்ஸ் (LMV) பெற்றவர்கள் போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், விபத்து காப்பீட்டு வழங்குவதில் பல்வேறு சட்டசிக்கல்கள் இருந்து வருகிறது.
இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது நாட்டில் சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் காரணம் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஆகவே LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் 7,500 கிலோ எடை வரையுள்ள போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை அடுத்து, விபத்து தொடர்பான இன்சூரன்ஸ் வழக்குகளில் காப்பீடு செலுத்துபவர்களுக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்று காப்பீட்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டின.
- கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் 11 முகூர்த்த நாட்கள் மட்டுமே இருந்தன.
- இந்த சீசனில் டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.
புதுடெல்லி:
வருகிற 12-ந்தேதி முதல் டிசம்பர் 16-ந்தேதி வரை கார்த்திகை மாத திருமண சீசன் ஆகும். எனவே அடுத்த வாரம் முதல் திருமண சீசன் களைகட்ட உள்ளது.
கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் இந்தியா முழுவதும் 35 லட்சம் திரும ணங்கள் நடைபெற்றன. அதன் மூலம் ரூ.4.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.
ஆனால் இந்த ஆண்டு சுமார் 48 லட்சம் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் ரூ.6 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு திருமண சீசனில் வர்த்தகம் 41 சத வீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு இந்த திருமண சீசனில் 11 முகூர்த்த நாட்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இந்த ஆண்டு திருமண சீசனில் 18 முகூர்த்த நாட்கள் உள்ளன. எனவே வர்த்தகம் அதிகரிக்க இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம் ஆகும்.
ஒட்டுமொத்த திருமண சீசன் வர்த்தகத்தில் டெல்லியின் பங்களிப்பு மட்டும் ரூ.1.5 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த சீசனில் டெல்லியில் மட்டும் 4.5 லட்சம் திருமணங்கள் நடைபெற இருக்கின்றன.
குறைந்தபட்சமாக தலா ரூ.3 லட்சம் செலவில் 10 லட்சம் திருமணங்களும், அதிகபட்சமாக ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட செலவில் 50 ஆயிரம் திருமணங்களும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்தின்போது பொருட்கள் மற்றும் சேவைகளை பெற அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கும். தங்கத்துக்கு 15 சதவீதம், ஆடைகளுக்கு 10 சதவீதம், வீட்டு உபயோக சாதனங்களுக்கு 5 சதவீதம், உலர் பழம், இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதம், மளிகை மற்றும் காய்கறிகளுக்கு 5 சதவீதம், பரிசு பொருட்களுக்கு 4 சதவீதம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
சேவையை பொருத்தவரையில், திருமண மண்டபத்துக்கு 5 சதவீதம், கேட்டரிங் சர்வீசுக்கு 10 சதவீதம், அலங்காரம், போக்குவரத்துக்கு 3 சதவீதம், போட்டோ, வீடியோவுக்கு 2 சதவீதம் செலவிட வேண்டியிருக்கும்.
இந்த தகவலை அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.






