search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "assembly poll"

    • நாகாலாந்து, மேகாலயாவில் இன்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திரிபுராவில் கடந்த 16- ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதற்கிடையே, மேகாலயா மற்றும் நாகாலாந்தில் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனது.

    மொத்தம் 120 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து, மேகாலயா பேரவைக்கு மொத்தம் 558 பேர் போட்டியிடுகின்றனர். ஆளும் தேசிய மக்கள் கட்சி(என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. பா.ஜ.க, காங்கிரஸ் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

    நாகாலாந்தில், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பா.ஜ.க. போட்டியிடுகிறது.

    இந்நிலையில், நாகாலாந்து, மேகாலயாவில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திரிபுரா தேர்தலுடன் இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    • நாகாலாந்து, மேகாலயாவில் நாளை ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
    • சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயா, நாகாலாந்துக்கு நாளை (27-ம் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாகாலாந்து, மேகாலயாவில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.

    இந்நிலையில், நாகாலாந்து, மேகாலயாவில் நாளை (27-ம் தேதி) ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மேகாலயாவை பொருத்தமட்டில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 11 கட்சிகளைச் சோ்ந்த 375 பேர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 12 மாவட்டங்களில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    நாகாலாந்து, மேகாலாயவில் மொத்தமுள்ள 120 பதவிகளுக்கு 558 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியாகிறது.

    • குஜராத்திற்கு செழிப்பை கொண்டு வந்தது தாமரை.
    • அதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    வல்சாத்:

    அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று தமது பிரச்சாரத்தை தொடங்கினார். வல்சாத் மாவட்டம் கப்ரடா தாலுகாவில் உள்ள நானா போந்தா கிராமத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார். அப்போது நான் இதை குஜராத்திற்காக உருவாக்கினேன் என்ற பிரச்சார முழுக்கத்தை அறிமுகம் செய்தார். மேலும் அவர் கூறியதாவது:

    குஜராத்திற்கு செழிப்பை கொண்டு வந்தது தாமரை. அதை மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குஜராத்தியும், அது ஆதிவாசியாக இருந்தாலும், மீனவராக இருந்தாலும், கிராமவாசியாக இருந்தாலும், நகரவாசியாக இருந்தாலும், இன்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்.

    அதனால்தான் இதை நான் குஜராத்திற்காக உருவாக்கினேன் என்று அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் தங்கள் கடின உழைப்பால் இந்த மாநிலத்தை உருவாக்கியுள்ளனர். 20 வருடங்களுக்கு முன்பு இங்குள்ள பழங்குடியினர் பகுதியில் ஒரு அறிவியல் பள்ளி கூட இல்லை, ஆனால் இன்று இப்பகுதியில் உள்ள அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பழங்குடியின மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    தெற்கு குஜராத்தில் உள்ள உமர்காம் முதல் வடக்கே அம்பாஜி வரையிலான பழங்குடியினப் பகுதியிலும் இப்போது ஐந்து மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இன்று இந்த மக்கள் 24 மணி நேர மின்சாரத்தைப் பெறுகிறார்கள், மாநிலத்தில் 100 சதவீத வீடுகளுக்கு குழாய் வழியே குடிநீர் கிடைக்கிறது.

    வெறுப்பை பரப்பும் பிரிவினைவாத சக்திகள், குஜராத்தை அவமதிக்க முயற்சித்தவர்கள், குஜராத்தில் இருந்து துடைத்து எறியப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளாக அந்த சக்திகள் கடுமையாக முயற்சித்து வந்தாலும், குஜராத் மக்கள் அவர்களை நம்பவே இல்லை. வெறுப்பை பரப்புபவர்களை குஜராத் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதற்குக் காரணம், மாநில மக்கள் கடுமையாக உழைத்து குஜராத்தை உருவாக்கியுள்ளனர்.

    கடந்த காலத்தில் குஜராத் மாநிலத்திற்கு தீங்கு விளைவிக்க முயன்றவர்கள் மக்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்தத் தேர்தலிலும் அவர்கள் அதே நிலையை சந்திப்பார்கள். டெல்லியில் நான் இருந்தாலும், குஜராத்தில் பாஜக இந்த முறை சாதனை வெற்றியை பெறும் என்று தகவல் கிடைத்துள்ளது. கடந்த கால சாதனைகளை முறியடிக்கவே இங்கு வந்துள்ளேன். உங்களுக்காக முடிந்தவரை அதிக நேரம் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராக இருக்கிறேன் என்று குஜராத் பாஜகவிடம் கூறியுள்ளேன். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

    • பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.
    • வான்வழித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

    காங்கரா: 

    வரும் 12ந் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலைவும் நிலையில் காங்கரா மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    அவர்கள் (காங்கிரஸ்) கடந்த 10 ஆண்டுகள் ஆடசி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது அவர்கள் இமாச்சல பிரதேச அப்பாவி மக்கள் ஏமாற்றுவதற்காக தேர்தல் வாக்குறுதியில் 10 உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். அதை யார் நம்புவார்கள்?. பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா தற்போது உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.  

    உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தி பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இந்தியாவின் எல்லைகளில் குழப்பம் விளைவிப்பவர் அதற்கு உரிய விலையை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை இதன் மூலம் உலகிற்கு அவர் அறிவித்தார்.

    ரஷியா நடத்திய வரும் போர் காரணமாக உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்த போது, இரு நாட்டு அதிபர்களிடமும் பேசி இந்தியர்கள் வெளியேற இரண்டு நாட்கள் போரை நிறுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த முறை இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டசபை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    தெலுங்கானா தேர்தலுக்காக தெலுங்கு தேசம் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் ரூ.2 லட்சம் வரை விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளது. #TTDPelectionmanifesto #TelanganaAssemblypoll
    ஐதராபாத்:

    113 இடங்களை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., தெலுங்கானா ராஷ்டரிய சமிதி, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், தெலுங்கு தேசம் கூட்டணி சார்பில் இன்று மாலை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

    ஐதராபாத் நகரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தெலுங்கானா மாநில தெலுங்கு தேசம் கட்சி தலைவர் எல்.ரமணா இந்த அறிக்கையை வெளியிட்டார்.

    2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் மற்றும் குத்தகை விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி. தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த சுமார் 1200 தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 3 ஏக்கர் நிலம் ஆகியவை அளிக்கப்படும்.

    விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்காக 10 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, சுய உதவி குழுக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சுழல்நிதி மற்றும் 10 லட்சம் ரூபாய்வரை வங்கிக் கடன், முதியோர், விதவையர், ஆதரவற்றோருக்கு  2  ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம், வீடு கட்ட 5 லட்சம் ரூபாய் நிதியுதவி ஆகியவை வழங்கப்படும்.

    மேலும், ஆண்டுக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, மேல்நிலை கல்வி, பட்டக்கல்வி, பொறியியல் கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு இலவச லேப்டாப், 8-ம் வகுப்பில் இருந்து மாணவியருக்கு இலவச சைக்கிள்கள் என பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகள் இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. #TTDPelectionmanifesto #TelanganaAssemblypoll
    ×