search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாவித்ரி ஜிண்டால்"

    • நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது.
    • ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு சாவித்ரி ஜிண்டால் வெற்றி பெற்றார்.

    அரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 48 இடங்களில் வெற்றி பெற்று 3 ஆவது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.

    நயாப் சிங் சைனி மீண்டும் அரியானா முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. .

    இந்நிலையில், அரியானா தேர்தலில் வெற்றி பெற்ற 3 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களான சாவித்ரி ஜிண்டால், தேவேந்தர் கத்யான், ராஜேஷ் ஜூன் இன்று பாஜகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

    மத்திய அமைச்சரும் அரியானா மாநில பாஜக. பொறுப்பாளருமான தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்து, பாஜக ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் ஹரியானாவில் பாஜகவின் பலம் 51 ஆக அதிகரித்துள்ளது.

    நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது. இதனையடுத்து அவர் ஹிசார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்

    பாஜகவில் இருந்து அதிருப்தி காரணமாக பிரிந்து சென்ற தேவேந்தர் கத்யான் கனார் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார். அதேபோல் பாஜகவில் இருந்து விலகிய ராஜேஷ் ஜூன் பகதூர்கர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்றார்.

    • அரியானாவின் ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஜிண்டால் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • அவர் குருஷேத்ரா தொகுதி பாஜக எம்பி நவீன் ஜிண்டாலின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் கடந்த 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் நடந்த ஒரே கட்ட தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகின.

    இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, அரியானாவில் பா.ஜ.க. 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் வெற்றியை பெறுகிறது.

    இந்நிலையில், ஹிசார் தொகுதியின் சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் 49,231 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் 30,290 வாக்குகள் பெற்றார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 19,000 ஆகும்.

    அதேபோல பா.ஜ.க. வேட்பாளராக களம் கண்டுள்ள அரியானாவின் மந்திரியும், ஹிசார் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கமல் குப்தா 17,385 வாக்குகள் பெற்று 3வது இடம் பெற்றுள்ளார்.

    சாவித்ரி ஜிண்டால் குருஷேத்ரா தொகுதி பா.ஜ.க. எம்பி நவீன் ஜிண்டாலின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார் சாவித்ரி ஜிண்டால்.

    சண்டிகர்:

    இந்தியாவின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருந்து வருபவர் சாவித்ரி ஜிண்டால்.

    ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது மகனுக்கு ஆதரவாக சாவித்ரி பிரசாரம் செய்தார்.

    இதற்கிடையே, அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரியானாவின் ஹிசார் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட சாவித்ரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்தார்.

    நேற்று பா.ஜ.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் லை பாஜக கடந்த புதன்கிழமை வெளியிட்டது. ஆனால் அதில் சாவித்ரியின் பெயர் இடம்பெறவில்லை. ஹிசார் தொகுதியில் எம்.எல்.ஏவாக உள்ளவரும், சுகாதார அமைச்சருமான கமல் குப்தாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அரியானாவின் ஹிசார் தொகுதியில் சாவித்ரி ஜிண்டால் சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார்.

    பா.ஜ.க.வில் சீட் மறுக்கப்பட்டதால் கோடீஸ்வர பெண்மணி சுயேட்சையாக போட்டியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

    • அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது.
    • 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை மேயர்ஸ் பெற்றுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் உலகின் டாப் 10 பெண் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. உலகளவில் உள்ள 2,781 பில்லியனர்களில் 2024-ம் ஆண்டில் மொத்த பில்லியனர் எண்ணிக்கையில் 13.3 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இது முந்தைய ஆண்டில் 12.8 சதவீதமாக இருந்தது.

    இந்தப் பட்டியலில் தொடர்ந்து 4-வது ஆண்டாக உலகின் பணக்கார பெண்மணி என்ற பட்டத்தை பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் பெற்றுள்ளார். இவர் லாரியல் நிறுவனரின் பேத்தி ஆவார். இவரது சொத்து மதிப்பு 98.2 பில்லியன் டாலராகும். அவரின் சொத்து லாரியல் குழுமத்தின் கிட்டத்தட்ட 35 சதவீத பங்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    அவரை தொடர்ந்து, 2-வது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆலிஸ் வால்டன் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 77.2 பில்லியன் டாலராகும்.

    இந்தப் பட்டியலில் 3-வது இடத்தில் ஜூலியா கோச் 66.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார். கோச் இண்டஸ்ட்ரீசில் 42 சதவீத பங்குகளைப் பெற்ற அவர் எண்ணெய் சுத்திகரிப்பு, மருத்துவத் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

    தனியார் நிறுவனமான மார்ஸ் இன்க்கின் வாரிசான ஜாக்குலின் மார்ஸ் 39.4 பில்லியன் டாலர் மதிப்புடன் 4-வது இடத்தில் உள்ளார்.

    மார்ஸ் இன்க் உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் ஒன்றாகும்.

    இந்தியாவின் பணக்காரப் பெண்மணியான சாவித்ரி ஜிண்டால் 38 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 5-வது இடம்பிடித்துள்ளார். ஜிண்டால் குழுமம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் வருவாய் 15 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது.

    6-வது இடத்தில் ரஃபேலா அபோன்டே-டயமண்டும், 7வது இடத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸின் முன்னாள் மனைவியான மெக்கென்சி ஸ்காட்டும், 8-வது இடத்தில் ஜினா ரைன்ஹார்ட்டும், 9-வது இடத்தில் அபிகாயில் ஜான்சனும், 10-வது இடத்தில் மிரியம் அடெல்சனும் உள்ளனர்.

    • ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் காங்கிரசில் இருந்து விலகினார்.
    • ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் முதல் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால். உலகின் 50-வது மிகப்பெரிய பணக்காரராகவும் அவர் இருக்கிறார்.

    ஜிண்டால் குழுமம் இரும்பு, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறது.

    அரியானா முன்னாள் மந்திரியும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், ஹிசார் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக 10 ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். அரியானா மாநில அமைச்சராக சுயநலமின்றி சேவை செய்திருக்கிறேன். ஹிசார் மக்கள் எனது குடும்பத்தவர்கள். எனது குடும்பத்தின் ஆலோசனையின்பேரில் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகிய சாவித்ரி ஜிண்டால் இன்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.

    சமீபத்தில் சாவித்ரி ஜிண்டாலின் மகனும், தொழிலதிபருமான நவீன் ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோடீஸ்வரர் பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் 91-வது இடத்தில் உள்ளார்.
    • கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் கடந்த 2005-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதன்பிறகு அவரின் மனைவி சாவித்ரி ஜிண்டால் தொழிலை வழிநடத்தி சென்றார்.

    புதுடெல்லி:

    உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

    இதில் அமெரிக்க தொழிலதிபர் எலான்மஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். லூயிஸ் உயிட்டன் பெர்னார்ட் அர்னால்டு 2-வது இடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெப்பெசோஸ் 3-வது இடத்திலும் உள்ளனர்.

    இந்த பட்டியலில் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், அதானி குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான கவுதம் அதானி 4-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 114 பில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2021 மற்றும் 2022-ம் ஆண்டுக்கு இடையில் அவரது நிகர சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலரில் இருந்து 90 பில்லியன் டாலராக வளர்ந்துள்ளது. அதானி குழுமம் இந்தியாவின் முதல் 3 கூட்டு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

    அதானி குழுமம் ஆற்றல், துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள், சுரங்கம் மற்றும் வளங்கள், எரிவாயு, பாதுகாப்பு மற்றும் விண்வெளி மற்றும் விமான நிலையங்கள் என பல்வேறு வணிகங்களுடன் 197.49 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்துடன், பொதுவில் பட்டியலிடப்பட்ட 7 நிறுவனங்களை கொண்டுள்ளது. அதன் ஒவ்வொரு வணிக பகுதியிலும் குழுமம் இந்தியாவில் தலைமைத்துவ நிலையை நிறுவி உள்ளது என்று அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த பிப்ரவரியில் இந்திய தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலையை பெற்றார். இந்நிலையில் தற்போது கவுதம் அதானி உலக பணக்காரர் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

    கடந்த வாரம் மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தனது முன்னாள் மனைவியிடன் இணைந்து நிறுவிய அறக்கட்டளைக்கு படிப்படியாக தனது சொத்து அனைத்தையும் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறி இருந்தார். இதனால் உலக பணக்காரர் பட்டியலில் அவர் சரிவை சந்தித்துள்ளார்.

    இந்த கோடீஸ்வரர் பட்டியலில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் 91-வது இடத்தில் உள்ளார். இவரது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் கடந்த 2005-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அதன்பிறகு அவரின் மனைவி சாவித்ரி ஜிண்டால் தொழிலை வழிநடத்தி சென்றார். அதன்பிறகு அரசியலிலும் இறங்கினார்.

    இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான இவரது சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் டாலராக இருந்தது. நடப்பாண்டில் சொத்து மதிப்பு 17.7 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு 12 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.

    அதேநேரம் கடந்த 2019 மற்றும் 2020-ல் இவரின் சொத்து மதிப்பு 50 சதவீதம் குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டில் சொத்து மதிப்பு 8.8 பில்லியன் டாலராக இருந்தது. 2019-ல் 5.9 பில்லியன் டாலராகவும், 2020-ல் 4.8 பில்லியன் டாலராகவும் சரிவினை கண்டிருந்தது.

    தனது கணவரின் வெற்றி மந்திரத்தின் மூலம் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் சாவித்ரி ஜிண்டால் உலகின் பணக்காரர் பட்டியலில் முதல் 13 பெண் கோடீஸ்வரர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.

    ×