47வது அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ராகுல் காந்தி வாழ்த்து

டொனால்டு டிரம்ப் 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்.
47வது அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு ராகுல் காந்தி வாழ்த்து
Published on

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின. மொத்தம் உள்ள 538 எலக்டோரல் வாக்குகளில் 270-க்கு மேல் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னிலையில் இருந்த குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் தற்போது 277 இடங்கள் வரை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

டொனால்ட் டிரம்ப் உங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள். அமெரிக்க அதிபராக நீங்கள் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்.

எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றிப்பெற கமலா ஹாரிஸ்க்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com