என் மலர்
ஆந்திர பிரதேசம்
- ராயலசீமா அல்லது கொனசீமா இடங்களில் நாங்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது.
- நாங்கள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆந்திர மாநிலம் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று கோத்தபெட்டா கிராமத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ராயலசீமா அல்லது கொனசீமாவில் நாங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. நாங்கள் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பசியுடன் உள்ள சிங்கம் வேட்டைக்கு காத்திருப்பது போல், இந்த தேர்தலில் அனைத்து துறையை சேர்ந்த மக்களும் இரண்டு பட்டன்களை அழுத்தி ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை தோற்கடிக்க மிகவும் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொனசீமான என்பது அமைதியானது என்று அறியப்பட்டது. இதற்கு முன்னதாக இங்கு வன்முறை நிகழ்ந்தது கிடையாது. ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தாக்குதல், நில அபகரிப்பு, பொய் வழக்கு, அட்டூழியங்கள் கமிஷன், ஜாதி அரசியல், மாபியா ராஜ்ஜியங்கள், கஞ்சா, அனைத்து வகையான ஊழல்கள் ஆகியவை அதிகரித்துள்ளது.
ஜகன்மோகன் ரெட்டி அரசின் அட்டூழியங்களை நிறுத்துவதற்கு தெலுங்கு தேசம், ஜனசீனா மற்றும் பாரதிய ஜனதா இணைந்து மக்கள் முன் வந்துள்ளன.
மத்தியில் பாஜக ஆட்சியில் உள்ளது. அது மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும். ஏமாற்றப்பட்ட மாநிலத்தை காப்பாற்றி சரியான பாதையில் கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். அதே நோக்கத்தில் மூன்று அரசியல் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
- கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் விளையாட்டின் மூலம் ஏற்கனவே பிரபலமானவர்.
- தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 9 தொகுதிகளில் அசாருதீன் பிரசாரம் செய்ய உள்ளார்.
திருப்பதி:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வெளி மாநிலங்களில் இருந்து பிரபலங்களை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, கோமதி ரெட்டி ராஜகோபால ரெட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரசார பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு, அருணாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் விளையாட்டின் மூலம் ஏற்கனவே பிரபலமானவர்.
இவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 9 தொகுதிகளில் அசாருதீன் பிரசாரம் செய்ய உள்ளார்.
அவர் விரைவில் தமிழகத்திற்கு வருவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
- கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- லட்டு கவுன்டர்களில் விற்பனை செய்யப்படும் சணல் பையை வாங்கி காலில் கட்டிக்கொண்டு நடந்து செல்கின்றனர்.
திருப்பதி:
திருப்பதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது.
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன் ஏழுமலையான் கோவில் சுற்றுவட்டார பகுதிகள், கோவிலில் இருந்து லட்டு வாங்க செல்லும் வழியில், நான்கு மாட வீதிகள் ஆகியவற்றில் கூல்-பாயின்ட் என்ற பெயரில் வெள்ளை பெயின்ட் அடித்து வைப்பது வழக்கம்.
ஆனால் இந்தமுறை சில வழிகளைவிட்டு விட்டு திருப்பதி மலையில் கூல் பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. பகல் 11 மணிக்கு மேல் கோவிலில் இருந்து வெளியில் வரும் பக்தர்கள், லட்டு பிரசாதம் வாங்கச் செல்லும் பக்தர்கள் ஆகியோர் அதிக உஷ்ணம் காரணமாக நடந்து செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர்.
அவர்கள் லட்டு கவுன்டர்களில் விற்பனை செய்யப்படும் சணல் பையை வாங்கி காலில் கட்டிக்கொண்டு நடந்து செல்கின்றனர்.
கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
- நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
திருப்பதி:
ஆந்திராவில் பிரபல நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார்.
நடிகர் பவன் கல்யாண் பித்தாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் கடந்த 3 நாட்களாக வாராஹி வாகனம் மூலம் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தார்.
தனியார் ஓட்டலில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
தொகுதி முழுவதும் உள்ள 2 லட்சம் பேர் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். ஆனால் என்னால் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள முடியவில்லை. தினமும் 200 பேருடன் மட்டுமே போட்டோ எடுக்க முடிகிறது.
தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
நான் பிரசாரத்தில் ஈடுபடும் போது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், ஆர்வலர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆளும் கட்சியினர் அனுப்பிய கூலிப்படையினர் கூட்டத்துடன் கூட்டமாக கலந்து சிறிய கத்தியால் என்னையும், எனது பாதுகாவலர்களையும் வெட்டினர். என்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காக்கிநாடாவில் வாராஹி யாத்திரை சென்ற போது என்னுடைய உயிருக்கு ஆபத்து இருந்தது.
தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் தோல்வி அடைந்த போதும், தேர்தலில் பீமாவரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த போதும் நான் துவண்டு விடவில்லை.
இந்த முறை வெற்றியை கொடுக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். அவர்தான் பித்தாபுரம் தொகுதிக்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், பெங்களூருவில் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் பணியாற்றி வருகின்றனர்.
- ஓய்வு பெற இருக்கும் இந்த 8 விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய இயக்குனராக விஞ்ஞானி ராஜராஜன், கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்பு மைய இயக்குனர் விஞ்ஞானி நாராயணன், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மைய இயக்குனராக விஞ்ஞானி நிலேஷ் தேசாய், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யு.ஆர்.ராவ் செயற்கைகோள் மைய இயக்குனராக விஞ்ஞானி சங்கரன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
அதேபோல், பெங்களூருவில் உள்ள மனித விண்வெளி விமான மைய இயக்குனர் விஞ்ஞானி மோகன், திருவனந்தபுரத்தில் இஸ்ரோ இன்டர்ஷியல் சிஸ்டம்ஸ் யூனிட் என்ற மையத்தின் இயக்குனராக விஞ்ஞானி பத்மகுமார் மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் இஸ்ரோவின் ஏ.டி.ஆர்.ஐ.என். என்ற ஆய்வு கூடத்தில் விஞ்ஞானியாக ராதா தேவி மற்றும் சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி நிகர் ஷாஜி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுடைய பணி காலம் இம்மாதம் (ஏப்ரல்), மே மற்றும் ஜூன் மாத்துடன் நிறைவு பெறுகிறது. ஓய்வு பெற இருக்கும் இந்த 8 விஞ்ஞானிகளுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
- கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
- நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்தில் ரூ.118 கோடி உண்டியல் வருவாய் கிடைத்தது. இதன் மூலம் கடந்த 25 மாதங்களாக தொடர்ந்து ரூ.100 கோடியை தாண்டி உண்டியல் வசூலாகி உள்ளது.
வருகிற 9-ந் தேதி யுகாதி ஆஸ்தானத்தையொட்டி தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் நாளை காலை 6 மணி முதல் 11 மணி வரை கோவில் கருவறை மற்றும் வளாகம் முழுவதும் தூய்மை ப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
இதனால் நாளை வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்காக கொண்டுவரும் பரிந்துரை கடிதங்களை தேவஸ்தானம் ரத்து செய்தது.
இதனால் ரேணிகுண்டா விமான நிலையம் மற்றும் திருப்பதி தேவஸ்தானத்தில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்ரீ வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகின்றன.
அதன்படி கடந்த 15 நாட்களில் ரூ.22.75 கோடிக்கு ஸ்ரீவாணி டிக்கெட்டு விற்பனையாகி உள்ளது.
திருப்பதியில் நேற்று 81, 224 பேர் தரிசனம் செய்தனர். 24,093 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.35 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டு காலத்துக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்.
- 100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும்
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராக அவருடைய தங்கை சர்மிளாவுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்து தேர்தல் களத்தில் இறக்கி உள்ளது.
சர்மிளா அண்ணன் என்று கூட பார்க்காமல் ஜெகன்மோகன் ரெட்டியை கடுமையாக விமர்சனம் செய்கிறார். அவர் மூலம் ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்த காங்கிரஸ் துடிக்கிறது.
இந்த நிலையில் பாராளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சர்மிளா வெளியிட்டார். அதில் 9 முக்கிய உத்தரவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 ஆண்டு காலத்துக்கு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். ஆந்திராவில் ஒவ்வொரு ஏழை குடும்பத்துக்கும் மாதம், 8,500 வீதம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2000 வழங்கப்படும். இந்த பணம் குடும்ப தலைவிகளிடம் தரப்படும்.
100 நாள் வேலை திட்டத்தில் தினக்கூலி ரூ.400 ஆக உயர்த்தப்படும். கேஜி முதல் பிஜி வரை அதாவது மழலையர் வகுப்பு முதல் முதுநிலை கல்வி வரை இலவசமாக கல்வி வழங்கப்படும்.
வீடற்ற ஏழைகளுக்கு தலா ரூ.5 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டித் தரப்படும். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதிகள் ஆந்திராவில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.
- ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
- தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்து வரப்படும் ஆண்களுக்கு ஒரு குவாட்டர், கோழி பிரியாணியுடன் ரூ.500 வரை வழங்கப்படுகிறது.
பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சியினருக்கு இரவு நேரங்களில் மது விருந்து அளிக்கப்படுகிறது. இதனால் ஆந்திர மாநிலத்தில் பல கோடி ரூபாய்க்கு மது வாங்கி அரசியல் கட்சியினர் பதுக்கி வைத்துள்ளனர்.
முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று கர்னூல் அருகே உள்ள எமிங்கனூரில் பிரசாரம் செய்தார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வேட்பாளர்கள் சார்பில் பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் வாகனங்களில் அழைத்து வரப்பட்ட னர்.
ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்த போது கூட்டத்தின் ஒரு பகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் தங்களை அழைத்து வந்த ஒவ்வொருவருக்கும் தலா ஒரு குவாட்டர் மது பாட்டில், கோழி பிரியாணி பொட்டலம் மற்றும் ரூ.300 முதல் 500 வரை பணம் வழங்க தொடங்கினர்.
கூட்டத்தில் இதனை அவர்கள் பகிங்கரமாக வினியோகம் செய்து கொண்டிருந்தனர். இதனை வாங்கிய குடிமகன்கள் உற்சாகமடைந்தனர்.அவர்களில் சிலர் மது குடிக்க தொடங்கினர்.
இது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. இதனை சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டனர். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- டெல்லி அணியின் பிரித்வி ஷா விக்கெட்டை டோனி கேட்ச் பிடித்து அசத்தினார்.
- விக்கெட் கீப்பராக 300 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்தார்.
விசாகப்பட்டினம்:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 5 கோப்பைகளை வென்றுள்ள மகேந்திர சிங் தோனி, 17 சீசனில் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பிரித்வி ஷா விக்கெட்டை கேட்ச் பிடித்து அசத்தினார் டோனி. இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் மற்றும் கேட்ச் மூலம் விக்கெட் கீப்பராக 300 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார். இதுவரை 213 கேட்சுகளும், 87 ஸ்டம்பிங்கும் செய்துள்ளார்.
இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் 274 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்திலும், 270 விக்கெட்டுகளுடன் டி காக் 3-வது இடத்திலும் உள்ளனர்.
- பா.ஜ.க., ஜனசேனா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
திருப்பதி:
ஆந்திராவில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பா.ஜ.க., ஜனசேனா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பஸ்சில் யாத்திரையாக சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் அடுத்த குட்டி பஸ் நிலையத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி ஈடுபட்டு இருந்தார். ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் கூடி இருந்தனர்.
ஜெகன்மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி பரபரப்பாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். அந்தரத்தில் பறந்து வந்த செருப்பு ஜெகன்மோகன் ரெட்டியை தாண்டி சென்று விழுந்தது.
இதனைக் கண்டு ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியினர் மற்றும் அவரது பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி செருப்பு வீசியவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியை நோக்கி மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வனத்துறை ஊழியர் ஒருவர் கத்தியால் வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது.
- இந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் கல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம் இந்துகூர் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரில் சிந்து ஊர் என்ற இடத்தில் நேற்று ரம்ப சோடவரம் மாவட்ட வன அலுவலர் நரேந்திரன் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அடர்ந்த வனப்பகுதியில் கருப்பு நிறத்தில் இருந்த மரத்தைக் கண்ட வன அலுவலர் நரேந்திரன் தனது ஊழியர்களிடம் மொட்டு போல் உள்ள இடத்தில் கத்தியால் வெட்ட கூறினார்.
வனத்துறை ஊழியர் ஒருவர் கத்தியால் வெட்டிய போது மரத்திலிருந்து ஓடை போல் தண்ணீர் கொட்டியது. இதனைக் கண்ட வனத்துறையினர் ஆச்சரியம் அடைந்தனர்.
இந்த மரத்தில் தண்ணீர் சேமிக்கும் அமைப்பு உள்ளது.
மரம் தனது தேவைக்கு ஏற்ப தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும் என்றும் முதலையின் தோலை போல் மரத்தின் பட்டை உள்ளதால் இதற்கு முதலை மர பட்டை எனவும், அறிவியல் பெயர் டெர்மி னாலியா டோமென்டோசா என தெரிவித்தார்.
தண்ணீரை சுவைத்து பார்த்து இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றது அல்ல எனவும் கூறினார்.
- இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜிடி- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதல்.
- விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி தனது முதல் ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 31 ரன் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்சை வீழ்த்தியது. மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் 277 ரன்கள் குவித்து ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ரன் எடுத்த அணி என்ற மகத்தான சாதனையை படைத்து அனைவரையும் மலைக்க வைத்தது.
குஜராத் அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் 6 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை சாய்த்தது. 2-வது ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் பணிந்தது.
இதை தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சாம்பியன் சென்னை அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும், 2-வது ஆட்டத்தில் 63 ரன் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்சையும் தோற்கடித்து வலுவான நிலையில் இருக்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும். அடுத்த ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது.
சென்னை அணி 'ஹாட்ரிக்' வெற்றியை ருசிக்கும் ஆவலுடன் தயாராகி உள்ளது.






