search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவில் வளாகத்தில் கடும் வெயில்- காலில் சணல் பை கட்டி நடக்கும் பக்தர்கள்
    X

    திருப்பதி கோவில் வளாகத்தில் கடும் வெயில்- காலில் சணல் பை கட்டி நடக்கும் பக்தர்கள்

    • கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
    • லட்டு கவுன்டர்களில் விற்பனை செய்யப்படும் சணல் பையை வாங்கி காலில் கட்டிக்கொண்டு நடந்து செல்கின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது.

    கோடைக்காலம் தொடங்குவதற்கு முன் ஏழுமலையான் கோவில் சுற்றுவட்டார பகுதிகள், கோவிலில் இருந்து லட்டு வாங்க செல்லும் வழியில், நான்கு மாட வீதிகள் ஆகியவற்றில் கூல்-பாயின்ட் என்ற பெயரில் வெள்ளை பெயின்ட் அடித்து வைப்பது வழக்கம்.

    ஆனால் இந்தமுறை சில வழிகளைவிட்டு விட்டு திருப்பதி மலையில் கூல் பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. பகல் 11 மணிக்கு மேல் கோவிலில் இருந்து வெளியில் வரும் பக்தர்கள், லட்டு பிரசாதம் வாங்கச் செல்லும் பக்தர்கள் ஆகியோர் அதிக உஷ்ணம் காரணமாக நடந்து செல்ல முடியாமல் அவதி அடைகின்றனர்.

    அவர்கள் லட்டு கவுன்டர்களில் விற்பனை செய்யப்படும் சணல் பையை வாங்கி காலில் கட்டிக்கொண்டு நடந்து செல்கின்றனர்.

    கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×