பாராளுமன்ற தேர்தல்: கிரிக்கெட் வீரர் அசாருதீன் தமிழகம் வருகிறார்

கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் விளையாட்டின் மூலம் ஏற்கனவே பிரபலமானவர்.தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 9 தொகுதிகளில் அசாருதீன் பிரசாரம் செய்ய உள்ளார்.
பாராளுமன்ற தேர்தல்: கிரிக்கெட் வீரர் அசாருதீன் தமிழகம் வருகிறார்
Published on

திருப்பதி:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வெளி மாநிலங்களில் இருந்து பிரபலங்களை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன், தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி, கோமதி ரெட்டி ராஜகோபால ரெட்டி எம்.எல்.ஏ. ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர பிரசார பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபடுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு, அருணாசலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் விளையாட்டின் மூலம் ஏற்கனவே பிரபலமானவர்.

இவருக்கு தமிழகத்தில் ரசிகர்கள் உள்ளனர். தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 9 தொகுதிகளில் அசாருதீன் பிரசாரம் செய்ய உள்ளார்.

அவர் விரைவில் தமிழகத்திற்கு வருவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com