என் மலர்
ஆந்திர பிரதேசம்
- 8-ந்தேதி ராஜம்பேட்டையில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டிக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.
- அன்று மாலை 6 மணிக்கு இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து பென்ஸ் சர்க்கிள் வரை பிரதமர் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.
திருப்பதி:
ஆந்திராவில் வருகிற 7-ந்தேதி பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். அனக்காபள்ளியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் ரமேஷை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அங்கிருந்து ராஜமுந்திரி செல்லும் பிரதமர் மோடி பா.ஜ.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மாநில தலைவர் புரந்தேஸ்வரியை ஆதரித்து பேசுகிறார்.
8-ந்தேதி ராஜம்பேட்டையில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி கிரண் குமார் ரெட்டிக்கு வாக்கு சேகரித்து பேசுகிறார்.
அன்று மாலை 6 மணிக்கு இந்திரா காந்தி மைதானத்தில் இருந்து பென்ஸ் சர்க்கிள் வரை பிரதமர் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார்.
இதேபோல் வருகிற 7-ந்தேதி கடப்பாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்கிறார். காங்கிரஸ் கட்சி மாநில தலைவரும் கடப்பா பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான ஒய் எஸ் சர்மிளாவை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
- காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் இன்னும் ஆஜரா கவில்லை.
- நோட்டீஸ் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு.
திருப்பதி:
மத்திய மந்திரி அமித்ஷாவின் போலி வீடியோ வழக்கு தொடர்பாக ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சுமார் 22 பேருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இந்த வழக்கில் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி சார்பில் அவருடைய வக்கீல் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் இன்னும் ஆஜரா கவில்லை. அவர்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- என்னை 16 மாதங்கள் ஜெயிலுக்கு அனுப்பியது காங்கிரஸ்.
- பா.ஜ.க.வுக்கு தான் அவருடைய ஆதரவு இருக்கும்.
திருப்பதி:
ஆந்திர முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேற்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவருடைய சகோதரி சர்மிளா தாக்கி பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பினர். அதனை கேட்டதும் ஜெகன்மோகன் ரெட்டி கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவர் கூறியதாவது:-
ஒரு குடும்பத்தில் இருந்து ஒருவர் அரசியலுக்கு வந்தால் போதும் அதனால் என்னுடைய சகோதரியை அரசியலுக்கு வர வேண்டாம் என கெஞ்சி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் கேட்காமல் தெலுங்கானா அரசியலில் இறங்கினார்.
சந்திரபாபு நாயுடு தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் கைகோர்த்துக் கொண்டு எனது சகோதரியை ஆந்திர மாநிலத்தில் அரசியலில் களமிறக்கி உள்ளனர். இதனால் எனது குடும்ப உறவுகள் சீர்குலைந்துள்ளன. அரசியலில் இருந்தாலும் இருவரும் மக்களுக்கு நன்மையை செய்யுங்கள் எனக்கூறி எங்களுடைய தாயார் ஒதுங்கி இருக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெறும். தனி மனிதர்களை பார்த்து ஆதரவு அளிப்பது எனது நோக்கம் அல்ல. மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறேன்.
பிரதமர் மோடியின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் சிறுபான்மையினர் மீதான அவரது கருத்துக்கள் குறித்து எனக்கு உடன்பாடு இல்லை.
ராகுல் காந்திக்கும், எனக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப்போகவில்லை. ராகுல் குறித்து என்னுடைய கருத்து ஒருபோதும் பாரபட்சமற்றதாக இருக்க முடியாது. என்னை 16 மாதங்கள் ஜெயிலுக்கு அனுப்பியது காங்கிரஸ்.
எனது குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி முயற்சி செய்தது. அதேபோல் ராகுல் காந்திக்கு ஒரு போதும் ஆதரவு இல்லை என்ற நிலையில் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இங்கு தெலுங்கு தேசம் கூட்டணி மற்றும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி, ராகுல் காந்திக்கு ஆதரவு இல்லை என தெரிவித்திருப்பதன் மூலம் அவர் வெற்றி பெற்றாலும் பா.ஜ.க.வுக்கு தான் அவருடைய ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் 25 தொகுதிகளில் யார் வெற்றி பெற்றாலும் மோடிக்கு தான் ஆதரவு கிடைக்கும் என பா.ஜ.க.வினர் உற்சாகமடைந்துள்ளனர்.
- 4 கண்டெய்னர் லாரிகளையும் பிடித்து சோதனையில் ஈடுபட்டனர்.
- ஐதராபாத் ரிசர்வ் வங்கிக்கு பணம் எடுத்து செல்லப்பட்டதாக தகவல்.
ஆந்திரா மாநிலம் கஜரம்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக வந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், கட்டுக்கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், அடுத்தடுத்து வந்த 3 கண்டெய்னர் லாரிகளையும் பிடித்து சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து கண்டெய்னர் லாரிகளிலும் ரூ.2000 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடத்திய விசாரணையில், கேரளாவில் இருந்து ஐதராபாத் ரிசர்வ் வங்கிக்கு பணம் எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
- தேர்தல் அறிக்கை மூலம் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டதாக ஆந்திராவில் சர்ச்சை எழுந்தது.
- ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பெருமளவில் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
திருப்பதி:
ஆந்திராவில் பா.ஜ.க. தெலுங்கு தேசம் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் இஸ்லாமியர்களுக்கு மெக்கா செல்லவும் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் செல்லவும் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி பங்கேற்கவில்லை. தேர்தல் அறிக்கை மூலம் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டதாக ஆந்திராவில் சர்ச்சை எழுந்தது.
ஆனால் பா.ஜ.க இதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறுகையில்:-
ஜனசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பாஜகவின் முழு ஆதரவு உள்ளது என்றார்.
மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பெருமளவில் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். இதன் மூலம் கூட்டணி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.
- ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
- வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைக்கு வருகிற 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த தேர்தல் அறிக்கையின் முகப்பு பக்கத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி தலைவர்கள் புகைப்படம் மட்டுமே இடம்பெற்று இருந்ததாகவும், பிரதமர் மோடி புகைப்படம் இடம் பெறவில்லை என்றும் கூறப்பட்டது. மேலும், நேற்று விழாவில் கலந்து கொண்ட, ஆந்திர மாநில பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சித்தார்த் நாத் சிங் தேர்தல் அறிக்கையை வாங்க மறுத்து விட்டதும் கூட்டணியில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.எம்.ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
- ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
திருப்பதி:
பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தமிழக பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய மறுத்தார்.
தற்போது தெலுங்கானா, ஆந்திர மாநிலத்தில் தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு வருகிறாார்.
ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.எம்.ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
குஷ்புவின் தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட 50 பேர் கூட இல்லை. இதனால் குஷ்பு எதுவும் பேசாமல் கைகூப்பிய படி வாகனத்தில் சென்றார். ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
3 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள போதிலும் 50 பேர் கூட இல்லாததால் இதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
வீடியோவை பார்த்தவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்புவின் பிரசாரத்திற்கு 50 பேர் கூட இல்லை என கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.
- தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
- ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதிகளும், 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
அமராவதி:
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
ஆந்திராவில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள், 25 மக்களவை தொகுதிகள் உள்ளன. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தப்படி, தெலுங்கு தேசம் கட்சி 144 சட்டசபை தொகுதிகளிலும், 17 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 10 சட்டசபை தொகுதிகள் மற்றும் 6 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜனசேனா கட்சிக்கு 2 மக்களவை தொகுதி, 21 சட்டசபை தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், ஆந்திராவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தால் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தெலுங்கு தேசம் கட்சி சூப்பர் சிக்ஸ் என்ற பெயரில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 15,000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
- வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
திருப்பதி:
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா 3-வது முறையாக போட்டியிடுகிறார்.
கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்த ரோஜா தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
தேர்தல் பிரசாரத்திற்கு வரும் ரோஜாவுக்கு கிராமங்களில் அமோகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நகரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக திரண்டு வந்து தங்களின் வீட்டில் உள்ள தாம்பூல தட்டில் கற்பூரம் ஏற்றி ரோஜாவை ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
11 திருஷ்டி பூசணிக்காய்களை ஒன்றாக சேர்த்து ரோஜாவை நோக்கி சுத்தியபடி அதனை தரையில் போட்டு உடைத்தனர்.
அங்கு ரோஜா நடந்து சென்று வாக்கு கேட்டபடி இருந்தார். அப்போது வீட்டின் மாடிகளில் நின்று பெண்கள் சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர். பிரசாரத்தின் போது மூதாட்டி ஒருவர் ரோஜாவின் கன்னத்தைக் கிள்ளி நலம் விசாரித்தார். அவரிடம் ரோஜாவும் நலம் விசாரித்து ஆதரவு கேட்டார்.
மேலும் ஒரு பெண் ரோஜாவை கண்டதும் நடன மாடியபடி ஆரத்தி எடுத்தார். அவரை வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ரோஜா பிரசாரத்தால் நகரி தொகுதி தற்போது களை கட்டி வருகிறது.
- சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது.
- சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு டான் சபாவில் வாகனத்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும் அவரது வாகனம் புறப்பட இருந்தது.
அப்போது மர்ம நபர்கள் அப்பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை தாண்டி திடீரென சந்திரபாபு நாயுடுவின் பிரசார வாகனத்தில் மீது ஏறினர்.
இதனைக்கண்ட பாதுகாப்பு படையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்களும் பவன் கல்யாணுக்காக தேர்தல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
- பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தெலுங்கு தேசம், பா.ஜ.க கூட்டணியில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
பவன் கல்யாண் தனது தொகுதியில் 2 கட்டங்களாக தேர்தல் பிரசாரத்தை முடித்து மற்ற இடங்களில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வருகிறார்.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி அவரது தம்பி பவன் கல்யாணுக்காக பிதாபுரம் தொகுதியில் வருகிற 5-ந் தேதி முதல் பல்வேறு கட்சித் தலைவர்களுடன் சேர்ந்து தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
நடிகர் சிரஞ்சீவியின் குடும்ப உறுப்பினர்களும் பவன் கல்யாணுக்காக தேர்தல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிரஞ்சீவி பிரசாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
- ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
- காங்கிரசால் மட்டுமே ஆந்திராவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்றார்.
அமராவதி:
ஆந்திராவில் பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடக்கிறது. அங்கு 25 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.
ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க-தெலுங்கு தேசம் இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மாநில காங்கிரஸ் தலைவரும், ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா நேற்று காக்கிநாடாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகளில் ஆந்திர மாநிலம் ஒரு அடி முன்னேற்றம் காணவில்லை. சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டியால் எந்தப் பயனும் இல்லை.
இருவரும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளனர். ஒருவர் கூட்டணி வைத்தும், மற்றொருவர் மறைமுகமாகவும் பா.ஜ.க.வின் கைக்கூலியாக உள்ளனர்.
ஆந்திராவுக்கு மீள முடியாத வீழ்ச்சியை பா.ஜ.க. கொடுத்துள்ளது. மாநிலத்துக்கு 10 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என வாக்குறுதி அளித்த அந்த கட்சி, மோசடி செய்துவிட்டது. போலவரம் திட்டத்தை பா.ஜ.க. புறக்கணித்து விட்டது. உண்மை நிலவரம் இப்படியிருக்க சந்திரபாபு நாயுடுவும், ஜெகன்மோகன் ரெட்டியும் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே ஆந்திராவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என தெரிவித்தார்.






