பிரசாரத்தில் ரோஜாவின் கன்னம் கிள்ளி நலம் விசாரித்த மூதாட்டி

முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார். வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பிரசாரத்தில் ரோஜாவின் கன்னம் கிள்ளி நலம் விசாரித்த மூதாட்டி
Published on

திருப்பதி:

ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுதியில் நடிகை ரோஜா 3-வது முறையாக போட்டியிடுகிறார்.

கடந்த வாரம் வேட்பு மனு தாக்கல் செய்த ரோஜா தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக அவர் நகரி தொகுதியில் உள்ள கிராமங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.

தேர்தல் பிரசாரத்திற்கு வரும் ரோஜாவுக்கு கிராமங்களில் அமோகமாக வரவேற்பு அளித்து வருகின்றனர். நகரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக திரண்டு வந்து தங்களின் வீட்டில் உள்ள தாம்பூல தட்டில் கற்பூரம் ஏற்றி ரோஜாவை ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

11 திருஷ்டி பூசணிக்காய்களை ஒன்றாக சேர்த்து ரோஜாவை நோக்கி சுத்தியபடி அதனை தரையில் போட்டு உடைத்தனர்.

அங்கு ரோஜா நடந்து சென்று வாக்கு கேட்டபடி இருந்தார். அப்போது வீட்டின் மாடிகளில் நின்று பெண்கள் சிறுவர்கள் ஆரவாரம் செய்தனர். பிரசாரத்தின் போது மூதாட்டி ஒருவர் ரோஜாவின் கன்னத்தைக் கிள்ளி நலம் விசாரித்தார். அவரிடம் ரோஜாவும் நலம் விசாரித்து ஆதரவு கேட்டார்.

மேலும் ஒரு பெண் ரோஜாவை கண்டதும் நடன மாடியபடி ஆரத்தி எடுத்தார். அவரை வழக்கமான புன்னகையோடு வரவேற்ற ரோஜா அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ரோஜா பிரசாரத்தால் நகரி தொகுதி தற்போது களை கட்டி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com