search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கு தேசம் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு நிதி உதவி- பா.ஜ.க. முழு ஆதரவு
    X

    பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா.

    தெலுங்கு தேசம் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு நிதி உதவி- பா.ஜ.க. முழு ஆதரவு

    • தேர்தல் அறிக்கை மூலம் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டதாக ஆந்திராவில் சர்ச்சை எழுந்தது.
    • ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பெருமளவில் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பா.ஜ.க. தெலுங்கு தேசம் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் இஸ்லாமியர்களுக்கு மெக்கா செல்லவும் கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் செல்லவும் நிதி உதவி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    மேலும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் புரந்தேஸ்வரி பங்கேற்கவில்லை. தேர்தல் அறிக்கை மூலம் தெலுங்கு தேசம், பா.ஜ.க. கூட்டணியில் திடீர் விரிசல் ஏற்பட்டதாக ஆந்திராவில் சர்ச்சை எழுந்தது.

    ஆனால் பா.ஜ.க இதனை மறுத்துள்ளது. இது தொடர்பாக பா.ஜ.க செய்தி தொடர்பாளர் சதினேனி யாமினி சர்மா கூறுகையில்:-

    ஜனசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பாஜகவின் முழு ஆதரவு உள்ளது என்றார்.

    மேலும் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் பெருமளவில் ஊழல் செய்ததாக அவர் குற்றம் சாட்டினார். இதன் மூலம் கூட்டணி தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டது.

    Next Story
    ×