என் மலர்
ஆந்திர பிரதேசம்
- மாணவிகளுக்கு ராமயம்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
- எலி தொல்லையை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் பள்ளியின் விடுதியில் 9 மாணவிகளை எலி கடித்தது. அவர்களுக்கு ராமயம்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எலி தொல்லையை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர். இதற்கிடையில், சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் விடுதியில் தூய்மை இல்லாதது குறித்து புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
- விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிடிஎஃப் வாசன் பல நாட்கள் சிறையில் இருந்தார். பலமுறை ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியான நிலையில் இறுதியாக 10 ஆண்டுகள் இருசக்கர வாகனத்தை ஓட்டக் கூடாது, மதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், டிடிஎஃப் வாசன் மீது போலீசில் புகார் அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதி மலைக்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்றிருந்த டிடிஎஃப் வாசன், சாமி தரிசன வரிசையில் பிராங்க் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். சாமி கும்பிடுவதற்காகக் காத்திருந்த பக்தர்களை ஏமாற்றும் விதத்தில் எடுக்கப்பட்ட பிராங்க் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முதன்மை கண்காணிப்பு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே, இது குறித்து தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருப்பதி மலையில் பக்தர்கள் மன வருத்தம் அடையும் வகையில் இது போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.
மேலும், டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான விஜிலன்ஸ் துறை செய்து வருகிறது.
#TTF வாசன் நாயும் #அஜீஸ் நாயும் திருப்பதி கோவிலுக்கு போயி ஃபிராங்க் பண்ணி வீடியோ போட்டு இருக்கான்.... @ncbn @TTDevasthanams @APPOLICE100 என்ன நடவடிக்கை எடுக்க போறாங்க பாப்போம்.... pic.twitter.com/UlysCp1R7z
— Gowri Sankar D - Say No To Drugs & DMK (@GowriSankarD_) July 11, 2024
- தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டபோது அமராவதி ஆந்திராவின் தலைநகராக உருவாக்கப்படும் என அறிவிப்பு.
- பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி மூன்று இடங்களில் தலைநகர் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக ஐதராபாத் இருந்து வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு ஆந்திர பிரதேச மாநிலம் ஆந்திரா பிரதேசம், தெலுங்கானா என இரண்டு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது 10 வருடங்களுக்கு ஐதராபாத் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும். அதன்பின் தெலுங்கானாவின் அதிகாரப்பூர்வ தலைநகராக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 2-ந்தேதியுடன் 10 வருடம் முடிவடைந்தது. இதனால் ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகராகிவிட்டது. ஆந்திர மாநிலத்திற்கு தலைநகர் இல்லாமல் உள்ளது.
ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டபோது அமராவதியை புதிய தலைநகரமாக உருவாக்க அம்மாநில அரசு திட்டமிட்டது. அதன்பின் ஜெகன்மோகன் ரெட்டி ஒன்றுக்கும் மேற்பட்ட தலைநகர் என்ற திட்டத்தை உருவாக்கினார்.
என்ற போதிலும் இதுவரை எந்த நகரும் இன்றும் தலைநகராக உருவாக்கப்படவில்லை. தலைநகரம் தேர்ந்தெடுக்கப்படும் வரை வெலகபுடி தற்காலிகமாக செயல்பட்டது.
தலைநகரம் அரசு அதிகாரிகள் பணிபுரியும் முக்கிய முனையமாக செயல்படக் கூடியது. முக்கிய அரசு அமைப்புகளான நீதித்துறை, நிர்வாக அலுவலகங்கள், சட்டமன்றம் போன்றவை தலைநகரத்தில் இருக்கும். நிர்வாகத்தின் இந்த மையப்படுத்தல் திறமையான நிர்வாகம், கொள்கை உருவாக்கம் மற்றும் பொது சேவை வழங்கல் ஆகியவற்றை எளிதாக்குகிறது.
குந்தூர் மாவட்டத்தின் கிருஷ்ணா நதியோரம் அமைந்துள்ள அமராவதி, சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர பிரதேச மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
51 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சிறந்த வகையில் தலைநகரை உருவாக்க கடந்த 2015-ல் மதிப்பீடு செய்யப்பட்டது. விவசாயிகளிடம் இருந்து சுமார் 33 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, சிங்கப்பூரை சேர்ந்த நிறுவனத்தால் கட்ட முடிவு செய்யப்பட்டது.
ஆனால், 2019-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சி தோல்வியடைந்தது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார்.
அமராவதி தலைநகராக மாறுவதற்கான அனைத்து திட்டங்களுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தடைபோட்டார். திட்டங்களுக்கான பட்ஜெட்டை குறைக்க சிங்கப்பூர் நிறுவனம் வெளியேறியது. அத்துடன் மூன்று தலைநகரங்களை உருவாக்க திட்டமிட்டார். இதனால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியது. நிலத்தை கொடுக்கக் கூடியவர்கள் உச்சநீதிமன்றததை நாடினர்.
தற்போது சந்திரபாபு நாயுடன் மீண்டும் வெற்றி பெற்று முதல்வராகியுள்ளார். இதனால் அமராவதிதான் மாநில தலைநகர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். விசாகப்பட்டினர் பொருளாதார தலைநகராக உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அமராவதி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்ட சந்திரபாவு நாயுடு, தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு மக்களின் தலைநகர் மீண்டும் கட்டப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவும் அமராவதியை மீண்டும் கட்டுவதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடியுள்ளது. மத்திய அரசு நிலம் கையகப்படுத்துவதற்கான மொத்த தொகையான 2500 கோடி ரூபாயில் 1500 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.
அமராவதியை தலைநகர் திட்டம் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் ஆந்திரா தலைநகர் இல்லாமல் உள்ளது.
- கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வீடு திரும்பவில்லை.
- சிறுமியின் தந்தை முச்சுமாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் 8 வயது பள்ளி சிறுமி 12 மற்றும் 13 வயதுடைய 3 சிறுவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிமை அன்று பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி வீடு திரும்பவில்லை. இதையடுத்து, உறவினர்கள் வீடுகளில் தேடியும் சிறுமி கிடைக்காததால் சிறுமியின் தந்தை முச்சுமாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து சிறுமியை பல இடங்களில் தேடி கிடைக்காததால் போலீசார் மோப்ப நாயை வரவழைத்தனர். அந்த மோப்ப நாய் அப்பகுதியை சேர்ந்த 6 மற்றும் 7 வகுப்பு படிக்கும் 12, 13 வயதுடைய மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்றது. இதையடுத்து போலீசார் அம்மாணவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட தகவல் வெளியானது.
பூங்காவில் விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை முச்சுமரி அணைக்கு அருகே ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், இதுகுறித்து சிறுமி வெளியே சொல்லிவிடுவாளோ என்ற பயத்தில் சிறுமியை கொலை செய்து உடலை பாசன கால்வாயில் வீசியதாகவும் கைதான சிறுவர்கள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அமராவதியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள முச்சுமரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் சடலம் இதுவரை மீட்கப்படவில்லை.
- ஆந்திர மாநில திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை.
- ஆந்திராவிக்ரு ரூ.60,000 - 70,000 கோடி அளவிற்கு முதலீடுகள் வரும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
வரும் ஜூலை 22ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், வரும் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 3வது முறையாக மோடி பிரதமரான பிறகு செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகும்.
இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநில திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக சொல்லப்பட்டது.
ஆந்திராவில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் ஆலை அமைப்பது தொடர்பாக எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.
அதன்படி, ஆந்திராவில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக வரும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இந்த தொழிற்சாலையின் மூலம் ஆந்திராவிற்கு ரூ.60,000 - 70,000 கோடி அளவிற்கு முதலீடுகள் வரும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாகுளம், மச்சிலிப்பட்டினம் மற்றும் ராமயப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த ஆலை அமைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து மோடி 3 ஆவது முறையாக பிரதமராகினார். ஆதலால் சந்திரபாபு நாயுடுவின் கோரிக்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- பஸ்சில் ஏறும் பயணிகளை கைகூப்பி வணங்கி வரவேற்கிறார்.
- உங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என கூறுகிறார்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், தெனாலியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வருபவர் சுதாகர் ராவ். தான் வேலை செய்யும் பஸ்சில் ஏறும் பயணிகளை கைகூப்பி வணங்கி வரவேற்கிறார்.
பயணிகள் ஏறியவுடன் பஸ் கிளம்பும் முன் உங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என கூறுகிறார். பயணிகளிடம் டிக்கெட் கொடுக்கும் போது இன்முகத்துடன் சிரித்தபடி டிக்கெட்டுகளை வழங்குகிறார்.
பின்னர் பயணிகள் இறங்கும் போது அரசு பஸ்சில் பயணம் செய்ததற்கு உங்களுக்கு நன்றி என மீண்டும் கைகூப்பி வணங்கி வழி அனுப்பி வைக்கிறார். இவரது செயல்பாடுகளை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
சமூக வலைத்தளங்களில் சுதாகர் ராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து அறிந்த ஆந்திரா போக்குவரத்து துறை மந்திரி ராம் பிரசாத் ரெட்டி சுதாகர் ராவிற்கு போன் செய்து உங்கள் மனம் நிறைந்த சேவைக்கு பாராட்டுக்கள் என வாழ்த்து தெரிவித்தார்.
- பலத்த காயம் அடைந்த மகபூபியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
- வழக்கு பதிவு செய்த போலீசார் ஜிலானியை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலத்தகராறில் சொந்த அக்காவை கோடரியால் கொடூரமாக தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
கர்லாடின்னே மண்டலத்தில் உள்ள பெனகசெர்லா கிராமத்தில் நேற்று, வீட்டு மனை தொடர்பான தகராறில், ஜிலானி என்பவர் தனது சகோதரியான மகபூபியை கோடரியால் தாக்கினார். அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும், சகோரியின் அழுகுரலுக்கு மத்தியிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த மகபூபியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜிலானியை கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக மகபூபி வசித்து வந்த பெனகசெர்லா கிராமத்தில் உள்ள வீடு தொடர்பாக தகராறு இருந்ததாகவும், ஜிலானி தனது சகோதரியை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு தொடர்ந்து மிரட்டி வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
- தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான எதிர்கட்சிகள் எதுவும் இல்லை.
- ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி புத்துயிர் பெறும்.
திருப்பதி:
ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியை சந்தித்தார். அப்போது ஆந்திரா தெலுங்கானா பிரிவினையால் ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த நிலையில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெலுங்கானா பிரிவினைக்கு பிறகு கடந்த 10 ஆண்டுகளாக தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கானா தேர்தலில் போட்டியிடாமல் இருந்தது.
தெலுங்கானாவில் பிரதான ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகரராவின் பி.ஆர்.எஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. தற்போது தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான எதிர்கட்சிகள் எதுவும் இல்லை.
ஒருங்கிணைந்த ஆந்திராவாக இருந்தபோது தெலுங்கு தேசம் கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருந்தது. அதேபோல் தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சி பிரிவு மீண்டும் தொடங்கப்படும்.
இதனால் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி புத்துயிர் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தெலுங்கானாவில் மீண்டும் கட்சியை செயல்படுத்துவதற்கான திட்டங்களையும் அறிவித்தார். தெலுங்கானா மக்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் என அவர் கூறினார்.
தெலுங்கானா முதல்-மந்திரியுடனான சந்திப்புக்கு பிறகு அந்த மாநில அரசியலில் சந்திரபாபு நாயுடு கவனம் செலுத்துவது பரரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் எப்போதும்போல் இன்றும் வழக்கம் போல் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் காயமடைந்த இருபது பேரையும் மீட்டு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ப்ரீ ஹீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
- சில சொத்துகள், நிலம், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பிரிப்பது முழுமையாக முடிவடையாமல் இருந்து வருகிறது.
- கூட்டத்தில் நிலுவையில் உள்ள சொத்துகளை பிரிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாக 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி பிரிக்கப்பட்டது. தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகியும் சில சொத்துகள், நிலம், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை உரிய முறையில் பிரிப்பது முழுமையாக முடிவடையாமல் இருந்து வருகிறது.
இது தொடர்பாக நேற்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் மகாத்மா ஜோதி ராவ் புலே பிரஜா பவனில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நிலுவையில் உள்ள சொத்துகளை பிரிப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்பிரச்சனையை சுமூகமாக முடிக்க இரு மாநில அதிகாரிகள் கொண்ட குழுவை அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குழு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
- சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
- 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை.
திருப்பதி:
ஆனி வார ஆஸ்தானத்தையொட்டி 9 மற்றும் 16-ந் தேதிகளில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும். ஆனி வார ஆஸ்தானம் 16-ந் தேதி நடக்கிறது.
இதனையொட்டி 9-ந்தேதி கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளது . 9-ந்தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது . இதனால் சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. எனவே 9-ந்தேதியும் ஆனிவார ஆஸ்தானம் நடைபெறும் 16-ந் தேதியும் 2 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
- சந்திரசேகரராவ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ரேவந்த்ரெட்டி உள்ளார். இந்த நிலையில் சந்திரசேகரரராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.சி.க்கள் (சட்டசபை மேல்சபை உறுப்பினர்கள்) முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கடசியில் சேர்ந்தனர்.

தண்டே விட்டல், பானுபிரசாத், தயானந்த், பிரபாகர் ராவ், பசவராஜு, மல்லேசம் ஆகிய 6 எம்.எல்.சி.க்கள் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகி காங்கிசில் இணைந்துள்ளனர். இது சந்திரசேகரராவ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
கடந்த மாதம் பாரத ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்களான காலே யாதய்யா, சஞ்சய்குமார் ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






