ஆந்திராவில் பயங்கரம்: சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து- 10 பேர் கவலைக்கிடம்

விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திராவில் பயங்கரம்: சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து- 10 பேர் கவலைக்கிடம்
Published on

ஆந்திராவில் உள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலையில் பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்து விபத்துக்குள்ளானது. இதில், 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 10 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் எப்போதும்போல் இன்றும் வழக்கம் போல் நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது தொழிற்சாலையில் உள்ள பாய்லர் ஒன்று திடீரென்று வெடித்துள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோர் காயமடைந்த இருபது பேரையும் மீட்டு விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து காரணமாக தொழிற்சாலையில் தற்போது உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ப்ரீ ஹீட்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com