நிலத்தகராறில் அக்காவை கோடரியால் கொடூரமாக தாக்கிய தம்பி

பலத்த காயம் அடைந்த மகபூபியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார் ஜிலானியை கைது செய்துள்ளனர்.
நிலத்தகராறில் அக்காவை கோடரியால் கொடூரமாக தாக்கிய தம்பி
Published on

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நிலத்தகராறில் சொந்த அக்காவை கோடரியால் கொடூரமாக தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

கர்லாடின்னே மண்டலத்தில் உள்ள பெனகசெர்லா கிராமத்தில் நேற்று, வீட்டு மனை தொடர்பான தகராறில், ஜிலானி என்பவர் தனது சகோதரியான மகபூபியை கோடரியால் தாக்கினார். அருகில் இருந்தவர்கள் தடுக்க முயன்றும், சகோரியின் அழுகுரலுக்கு மத்தியிலும் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த மகபூபியை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜிலானியை கைது செய்துள்ளனர். கடந்த சில மாதங்களாக மகபூபி வசித்து வந்த பெனகசெர்லா கிராமத்தில் உள்ள வீடு தொடர்பாக தகராறு இருந்ததாகவும், ஜிலானி தனது சகோதரியை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு தொடர்ந்து மிரட்டி வந்ததும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com