ஆந்திராவில் பயணிகளை வரவேற்கும் அரசு பஸ் கண்டக்டர்: குவியும் பாராட்டுக்கள்

பஸ்சில் ஏறும் பயணிகளை கைகூப்பி வணங்கி வரவேற்கிறார். உங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என கூறுகிறார்.
ஆந்திராவில் பயணிகளை வரவேற்கும் அரசு பஸ் கண்டக்டர்: குவியும் பாராட்டுக்கள்
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், தெனாலியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வருபவர் சுதாகர் ராவ். தான் வேலை செய்யும் பஸ்சில் ஏறும் பயணிகளை கைகூப்பி வணங்கி வரவேற்கிறார்.

பயணிகள் ஏறியவுடன் பஸ் கிளம்பும் முன் உங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என கூறுகிறார். பயணிகளிடம் டிக்கெட் கொடுக்கும் போது இன்முகத்துடன் சிரித்தபடி டிக்கெட்டுகளை வழங்குகிறார்.

பின்னர் பயணிகள் இறங்கும் போது அரசு பஸ்சில் பயணம் செய்ததற்கு உங்களுக்கு நன்றி என மீண்டும் கைகூப்பி வணங்கி வழி அனுப்பி வைக்கிறார். இவரது செயல்பாடுகளை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

சமூக வலைத்தளங்களில் சுதாகர் ராவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து அறிந்த ஆந்திரா போக்குவரத்து துறை மந்திரி ராம் பிரசாத் ரெட்டி சுதாகர் ராவிற்கு போன் செய்து உங்கள் மனம் நிறைந்த சேவைக்கு பாராட்டுக்கள் என வாழ்த்து தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com