
* போனிலோ அல்லது ரோட்டில் எதிர்பாராத விதமாகவோ யாரேனும் ஒரு ஆணை அந்த பெண் சந்தித்து பேசினால், உடனே யார் அவன்? அவன் கூட எல்லாம் உனக்கு என்ன பேச்சு என்று அவசியம் இல்லாமல் கேட்காதீர்கள்.
* இன்னும் உன் ஆண் நண்பர்களுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறாயா? என்று கேட்டால் கட்டாயம் ஒரு பெண்ணுக்கு கோபம் வரும்.
* முன்னால் காதல் முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும். அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமென்று துருவி துருவி பெண்களை கேள்வி கேட்காதீர்கள்.
* ஏன் உனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற கேள்வி பல பெண்களை கோபப்பட செய்கிறதாம்.
* என்ன காரணமோ தெரியவில்லை, பெண்களுக்கு வயதை பற்றி பேசினாலோ அல்லது கேள்வி கேட்டாலோ பிடிப்பதே இல்லை. இளமை குறைகிறது என்ற எண்ணத்தை இது தருவதால், வயதை பற்றி பெண்களிடம் பேசாமல் இருப்பதே நல்லது.
* உங்களுடன் ஒரு பெண் வெளியில் வந்தால், இதற்கு முன்னால் வேறு எந்த ஆணுடனாவது இங்கே வந்து இருக்கிறாயா என்று மட்டும் கேட்டு விடாதீர்கள், அப்பறம் உங்கள் கதை அவ்வளவு தான்..!