search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    பெண்கள் கருத்தரிக்க சரியான நாட்கள் எது?
    X

    பெண்கள் கருத்தரிக்க சரியான நாட்கள் எது?

    • தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள்.
    • தம்பதியர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது.

    பெண்களுக்கு ஒரு கர்ப்பப்பை, இரண்டு கருமுட்டை பை, ஒரு கரு இணைப்பு குழாய் ஆகியவை இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும். சில பெண்களுக்கு 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வரும்.

    இந்த 28 நாளில் முதல் 4 - 5 நாட்களில், இரண்டு கருமுட்டை பைகளிலும் 3-4 முட்டைகள் வளரத் தொடங்கும். இந்த கருமுட்டைகளில், ஒரு முட்டை மட்டும் தலைவியாக உருவாகும். அந்த ஒரு தலைவி கருமுட்டைதான் அந்த மாதத்தில் வருகின்ற கருமுட்டை. இந்தத் தலைவி கருமுட்டை நன்கு வளர்ந்து 14-ம் நாளில் வெடிக்கும். இது வெடிக்கையில் இதிலிருந்து வெளிவருவது, 'கருமுட்டை'. இந்த கருமுட்டையானது மிகவும் அரிதானது. இதை 'பொக்கிஷம்' என்றும் சொல்லலாம்.

    இந்த கருமுட்டை 16 மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். இந்த நேரத்துக்குள் ஒரு ஆண் விந்துவுடன் இந்த கருமுட்டை இணைந்தால்தான். அது குழந்தையாக (கருவாக) மாறும்.

    14-ம் நாளில் ஏற்பட்ட உடலுறவு அல்லது அதற்கு முந்தைய நாளில் ஏற்பட்ட உடலுறவில் உள்ளே வந்த ஆண் விந்துகள் வேகமாக மேலே வருகின்றன. இந்த ஆண் விந்துகள் வேகமாக மேலே வர அதன் வால் பகுதி உதவுகிறது. இது 10 மைக்ரான் அளவே இருக்கும்.

    இந்த கருமுட்டை வெளிவரும்போது சிந்துகின்ற நீர், இந்த கெமிக்கலின் ஈர்ப்பால் ஆண் விந்துக்கள் ஈர்க்கப்படும். இந்த ஈர்ப்பால் விந்துக்கள் அதைத் தேடி போய் பெண்ணின் கருமுட்டையை பிடித்துக் கொள்ளும்.

    மில்லியன் கணக்கில் பெண்ணின் யோனி குழாயில் (பிறப்புறுப்பு வழியாக) விழுகின்ற விந்துகளில், வெறும் 1000 கணக்கான விந்துகள் மட்டுமே ஒவ்வொரு தடைகளையும் தாண்டி பெண்ணின் கருமுட்டை இருக்கும் இடத்தில் சேர்கின்றன.

    இந்த நேரத்தில் விரல் அளவே உள்ள கரு இணைப்பு குழாயானது, நகர்ந்து சென்று கெமிக்கலின் ஈர்ப்பால், அதில் உள்ள துளைகள் வழியாக விந்துவை ஈர்த்துக்கொள்ளும். இந்த இடத்தில்தான் விந்தணுவும் கருமுட்டையும் இணை சேரும். பின்னர் இது கருவாக உருவாகும்.

    கருவாக உருவான நாளிலிருந்து, 3 நாட்களுக்குள்ளே அப்படியே கரு குழாய் வழியாக நகர்த்திக்கொண்டு கர்ப்பப்பைக்குள் கருவை உட்கார வைப்பது, கர்ப்பப்பை குழாய்தான். இந்த செயல்பாடு நடக்க மயிர்கால்கள் போன்ற அமைப்பில் உள்ள 'சிலியா' எனப்படும் ஒன்று, மெல்ல நகர்ந்து நகர்ந்து கருமுட்டையை கர்ப்பப்பையில் சேர்க்கிறது.

    கர்ப்பப்பையின் உள்ளே வந்த விந்தணுவின் அளவு வெறும் 10 மைக்ரான் அளவுதான். ஆனால், ஈர்த்தது 100 மைக்ரான் அளவுள்ள கருமுட்டை. இது இரண்டும் சேர்ந்து கருவாகி, கரு வளர்ந்து கொண்டே இருக்கையில் 130-140 மைக்ரான் அளவில் கர்ப்பப்பையில் இறங்கும். கர்ப்பப்பையில் இறங்கும்போது, கருவை 'ஐந்தாவது நாள் கரு' என்பார்கள்.

    கர்ப்பப்பையின் உள் சவ்வோடு கரு ஒட்டிக்கொள்ளும். இந்தக் கரு வேராக இறங்கி, தாயோடு ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும். இதற்கு 6-7 நாட்கள் வரை ஆகும்.

    இந்த 6-7 நாட்களில் குழந்தையின் ஹார்மோன் தாயின் ரத்தத்தில் கலக்கும். இந்த சமயத்தில் தாயின் ரத்தத்தைப் பரிசோதித்தால், கரு உருவாகியிருப்பதைக் கண்டுபிடிக்க முடியும். 'பாசிடிவ்' என்ற ரிசல்ட் ரத்தப் பரிசோதனையில் தெரியும்.

    Next Story
    ×