
தலைக்கு குளிக்கும்போது அதிக வெப்ப நிலையில் உள்ள தண்ணீரைக் கொண்டு முடியை அலசுவது தவறு. ஏனெனில் உங்கள் முடி அதிகம் சேதமடையும். அத்துடன் முடிகளில் வெட்டுகளையும் ஏற்படுத்தும். எனவே மிதமான சூட்டில் உள்ள நீரை பயன்படுத்த வேண்டும்.
conditioner பயன்படுத்தும்போது, முடியின் நடுப்பகுதியில் இருந்து கீழ்பகுதி வரை பயன்படுத்துவது நல்லது. ஏனெனில், அடிப்பகுதியில் உள்ள முடிகள் வெகு நாட்களுக்கு முன்பே வளர்ந்த ஒன்றாகும். எனவே அவற்றை மட்டும் நீங்கள் conditioner செய்தால் போதுமானது. மேலும் உங்கள் முடிக்கு தேவையான அளவு மட்டும் conditioner உபயோகிப்பது சிறந்தது.
ஈரமான கூந்தல் கனமானதுடன் மிகவும் மென்மையானது. எனவே, அப்போது நீங்கள் கூந்தலை வாரும் போது உடைந்து விடும். ஆகையால், நீங்கள் குளித்து முடித்து கூந்தல் உலர்ந்த பிறகு வார வேண்டும். அல்லது குளிக்க செல்லும் முன்பு வாரலாம்.
உங்கள் உடலுக்கு ஒரு துண்டையும், தலைமுடிக்கு ஒரு துண்டையும் பயன்படுத்துங்கள். உங்கள் முடியை தலைகீழாக அல்லது வலதுபுறமாக போட்டு துவட்டுவது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் முடியில் உள்ள ஈரம் விரைவில் வெளியேறிவிடும்.
ஈரமான தலைமுடியை பின்னல் போடக் கூடாது. சிறிது சீரம் பயன்படுத்திவிட்டு, சற்று காய்ந்த பிறகு ஒரு தளர்வான பின்னல் பின்னிக் கொள்ளலாம்.
குறைந்தது மூன்று அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் முடியின் அடிப்பகுதியை வெட்டுவது அவசியம். இது பூச்சிவெட்டுகளை அகற்ற உதவும். ஆனால், மற்ற முடி வெட்டும் முறைகளை கையாள்வது தவிர்க்க வேண்டும். குறிப்பாக வீட்டில் அதனை செய்வது தவறு.