என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல் (Health)
X
சூப்பரான ஸ்நாக்ஸ் காலிஃப்ளவர் போண்டா
Byமாலை மலர்8 Sept 2017 3:16 PM IST (Updated: 8 Sept 2017 3:17 PM IST)
இந்த மழைக்காலத்தில் மாலையில் டீ, காபியுடன் ஏதாவது சூடாக சாப்பிட சூப்பராக இருக்கும். இன்று காலிஃப்ளவர் போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 150 கிராம்
அரிசி மாவு - 75 கிராம்
வெள்ளை ரவை - 1 டேபுள் ஸ்பூன்
காலிஃப்ளவர் - 300 கிராம்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - 1/2 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
ஓமம் - 1/4 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
உப்பு - ருசிக்கேற்ப
கடலை எண்ணெய் - பொரிக்க.
செய்முறை :
ப.மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக வெட்டி உப்பு 10 நிமிடம் தண்ணீரில் போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், இஞ்சி துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை, ஓமம், உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனுடன் சூடாக காய்ச்சிய கடலை எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து, பின் சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு மாவை கலந்து வைக்கவும்.
கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சுத்தம் செய்து வைத்த காலிஃப்ளவர் துண்டுகளை மாவில் நன்றாக தோய்த்து எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
தீயை மிதமான (மீடியம்) தீயில் வைத்து வறுத்து எடுக்கவும். எண்ணெய் சலசலப்பு அடங்கியதும் போண்டாவை எண்ணெயில்லாமல் வடிகட்டி எடுத்து பரிமாறவும்.
சுட சுட காலிஃப்ளவர் போண்டா தயார்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

Next Story
×