search icon
என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை `தடுப்பூசி
    X

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை `தடுப்பூசி'

    • நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
    • ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.

    கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. முன்கள பணியாளர்களை தொடர்ந்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி இருக்கிறது. இது உடலில் கொரோனா நோய்க்கு எதிரான ஆற்றலை பெருக்குகிறது.

    அதே நேரத்தில் நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. அதுவும் இயற்கையான தடுப்பூசி போன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதன் ஆற்றலை தக்கவைத்துக்கொள்வதற்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகளை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும்.

    புரதங்கள்: இது ஆன்டிபாடி பண்புகளை கொண்டது. நோய் எதிர்ப்பு செல்களை பலப்படுத்தக்கூடியது. பால், பாலாடைக்கட்டி, பன்னீர், தயிர், பருப்பு வகைகள், முட்டை, மீன் போன்றவற்றில் புரதம் அதிகளவு உள்ளடங்கி இருக்கிறது. சைவ உணவுகளை விட அசைவ உணவுகளில் தரமான புரதங்கள் காணப்படுகின்றன.

    வைட்டமின் ஏ: இந்த சத்து நோய்த்தொற்றுக்கு எதிராக போராடும் செல்களை ஊக்குவித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் ஆற்றல் கொண்டது. பால், முட்டை, கேரட், குடைமிளகாய், ஆரஞ்சு, தக்காளி மற்றும் அடர் பச்சை இலைக் காய்கறிகள் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் காணப்படுகிறது.

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்: பாக்டீரியாவை அழிக்கும் ரத்த வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தக் கூடியது. நொய்த்தொற்றுகளால் ஏற்படும் அழற்சியிலிருந்தும் பாதுகாக்கும் தன்மை கொண்டது. மீன்,மீன் எண்ணெய், ஆளி விதை, ஆளி விதை எண்ணெய், அக்ரூட், சோயா எண்ணெய், எள், பாதாம் போன்றவற்றில் ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்திருக்கிறது.

    வைட்டமின் சி: நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வைட்டமின்களுள் இது முக்கியமானது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைரஸ் உடலுக்குள் நுழைவதை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை. ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடை மிளகாய், பசலை கீரை, அடர் பச்சை இலை காய்கறிகள் போன்றவற்றில் இது அதிகம் காணப்படும்.

    துத்தநாகம்: உடலில் துத்தநாகம் குறைந்தால் நோய் எதிர்ப்பு செல் களின் வளர்ச்சி மற்றும் அவற்றின் செயல்பாடுகள் வெகுவாக பாதிப்புக்குள்ளாகும். எள், பருப்பு வகைகளில் துத்தநாகம் அதிகம் இருக்கிறது.

    புரோபயாடிக்குகள்: புரோபயாடிக்குகள் என்று அழைக்கப்படும் நல்ல பாக்டீரியாக்களைக் கொண்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை துரிதப்படுத்தலாம். சில வகை நோய்த்தொற்று களின் அபாயத்தையும் குறைக்கலாம். தயிர், பாலாடைக்கட்டியில் புரோபயாடிக் அதிகம் காணப்படுகிறது.

    Next Story
    ×