search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மைதா சேர்த்த உணவை சாப்பிட்டா இந்த வியாதிகள் வரும்
    X
    மைதா சேர்த்த உணவை சாப்பிட்டா இந்த வியாதிகள் வரும்

    மைதா சேர்த்த உணவை சாப்பிட்டா இந்த வியாதிகள் வரும்

    மைதாவில் உள்ள கேடு தரும் ரசாயனமும், கெமிக்கல் பூச்சும் அதிகமாக உடலில் சேரும் போது பக்கவிளைவுகள் உண்டாவதற்கு வாய்ப்புண்டு.
    அத்தியாவசியமான காய்கறிகளும், உணவுபொருள்களும் இராசயன முறையில் விளைந்து வருவதால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு ஒருபுறம் என்றால் தெரிந்தே விஷமாகும் மைதாவை உங்கள் வீட்டில் அனுமதிக்காமல் இருப்பதே சிறந்தது என்கிறார்கள் அனுபமிக்க மருத்துவர்கள்.

    வீட்டில் தயாரிக்கும் கோதுமை ரொட்டிகளில் கூட மைதாவின் வெண்மையான ரொட்டி அதிகமாக இடம்பிடித்து வருகிறது. எப்போதாவது மைதா உணவு வகைகள் என்றால் பரவாயில்லை. ஆனால் அவ்வப்போது மைதா உணவுகள் எடுக்கும் போது செரிமானக் கோளாறுகள் உண்டாகிறது. கடும் உழைப்பு இல்லாமல் இருப்பவர்களுக்கு மைதா உணவுகள் கெடுதலையே உண்டு பண்ணுகிறது.  

    உடலுக்கு நன்மைதரும் தானியங்களில் ஒன்று கோதுமை. இந்த கோதுமையில் இருந்துதான் மைதா தயாரிக்கப்படுகிறது. ஆனால் கோதுமையில் இருக்கும் சத்துக்கள் நீக்கப்பட்டு பிரிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. கோதுமையில் இருந்து மைதாவாக பிரித்தெடுக்கும்போது மாவு பழுப்புநிறத்தில் இருக்கிறது. இந்த பழுப்பு நிறத்தைப் போக்கி பளீர் வெள்ளை நிறம் கொடுக்க துணிகளின் வெண்மை நிறத்துக்கு பயன்படுத்தும் பென்சைல் பெராக்ஸைடு, குளோரின் என கெடுதி தரும் பல இராசயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    அலொக்ஸான் என்னும் வேதிப்பொருள் மைதாவை மிருதுவாக்கவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகிறது. நாள்பட்ட மைதா கெடாமல் இருக்க மெதில் புரோமைடு என்னும் ரசாயன புகைமூட்டத்தை செலுத்தி மைதாவை பாதுகாக்கிறார்கள். இந்த கேடு தரும் ரசாயனமும், கெமிக்கல் பூச்சும் அதிகமாக உடலில் சேரும் போது பக்கவிளைவுகள் உண்டாவதற்கு வாய்ப்புண்டு.

    மைதாவால் உண்டாகும் நோய்கள்:

    இன்று உலகில் அதிகம் பேரை பாதித்திருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு. அதாவது சர்க்கரை நோய். அநேகம் பேருக்கு சர்க்கரை நோயை உண்டாக்கிய பெருமை மைதாவையே சேரும் என்று சொல்லலாம். மைதாவில் சேர்க்கப்படும் அலொக்ஸான் என்னும் வேதிப்பொருள் உடலில் இன்சுலின் சுரப்பதைக்கட்டுப்படுத்துகிறது. இதனால் மைதாவில் தயாரித்த உணவுகள் பிரட், பேக்கரி, பரோட்ட என எதுவாக இருந்தாலும் இதை சாப்பிட்டதும் உடலில் மிகவேகமாக இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை உயர்த்துகிறது.
    Next Story
    ×