search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது...ஏன் தெரியுமா?
    X

    டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது...ஏன் தெரியுமா?

    டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது, இதனால், என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் உணர்வதில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.
    இலகுவான உடையுடன், தரையில் அமர்ந்து உண்பதே, சிறப்பாகும், உணவும் எளிதில் செரிமானமாகும். ஆயினும் நடப்பது என்ன? நேரம் இல்லை, உடனே, வேலைக்கு போகணும் என்று அலுவலக உடைகளைக் களையாமல், இறுக்கமான உடைகளுடன், வேக வேகமாக உணவு மேஜையில் சாப்பிடுவது தவறு.

    எனக்கு மூட்டு வலி, தரையில் அமர முடியாது, என்று டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவது, இதனால், என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்தோமா? மேலும், பெண்களால், குனிந்து நிமிர்ந்து உணவுகளைப்பரிமாற முடியவில்லை, எளிதாக பரிமாற வசதி என்று, பாதிப்புகளை உணராமல், டைனிங் டேபிளை வீடுகளில் அத்தியாவசியப் பொருளாக ஆக்கிவிட்டார்கள். இதைவிட, பாதிப்புகள் மிக்க மற்றுமொரு உணவுமுறை, தற்கால வேகமான வாழ்க்கையின் ஒரு அங்கமான, பஃபே ஸ்டைல் மற்றும் நின்றுகொண்டே சாப்பிடும் கையேந்தி பவன்களின் ஃபாஸ்ட் புட் கலாச்சாரம்.

    கால்களை தொங்கவிட்டு அமர்ந்து சாப்பிடுவதால், இரத்த ஓட்டம் கால்களில் மட்டும் இயங்கிறது. இதனால், உடலில் ஆற்றல் மையங்களான மூளை, நுரையீரல், சிறுநீரகம் இவற்றுக்கு இரத்த ஓட்டம் செல்லாமல், அவற்றின் இயக்கத்தில் தடைகள் ஏற்பட்டு, அதுவே, செரிமானக் கோளாறு போன்ற பல உடல்நல பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. இதனாலேயே, டைனிங் டேபிளில் அமர்ந்து உண்பதை, தவிர்க்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.



    பொதுவாக வெறும் தரையில் அமர்ந்து யாரும் சாப்பிடுவதில்லை, தரையில், ஈச்சம் இலைகளால் செய்யப்பட்ட தடுக்கு மேல் அமர்ந்தோ, பந்திப்பாய் எனும் பனை ஒலைப்பாய்களில் அமர்ந்தோ, கால்களை சம்மணமிட்டு அமர்ந்து, வாழை இலைகளில் உணவைப்பரிமாற, மெதுவாக உணவை நன்கு மென்று சாப்பிடுவர். உணவு பிடித்ததாக இருந்தால், அள்ளியள்ளி நிறைய சாப்பிடுவது, பிடிக்காத உணவு எனில், வேண்டாவெறுப்பாக சாப்பிடுவது போன்று இல்லாமல், நிதானமாக, இலையில் இடப்பட்ட உணவுகளை, அளவோடு உட்கொள்வர்.

    காலை மடித்துவைத்து, சம்மணமிட்டு சாப்பிட்டுவருவதால், உடலில் உள்ள இரத்த ஓட்டம், கால்களுக்கு செல்லாமல், வயிற்றுப்பகுதியில் ஆற்றலை அளித்து, உண்ட உணவு விரைவில் செரிமானமாகி, உடல் நலம் சீராகும். எனவேதான், தரையில் அமர்ந்து சாப்பிடுவதை, பெரியோர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, உடலில் உள்ள இராஜ உறுப்புகள் எனும் மூளை, கண்கள், நுரையீரல், கல்லீரல் மண்ணீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு இரத்த ஒட்டம் சீராக சென்று, ஆற்றல்சக்தி, உடலில்பரவி, உடல் ஆரோக்கியம் மேம்பட, காரணமாக அமைகிறது.

    விருப்பம் இருக்கு ஆனால், என்னால் தரையில் அமர்ந்து சாப்பிட முடியவில்லையே! டைனிங் டேபிளில் அமராமல் என்னால் சாப்பிட முடியவில்லை என்பவர்கள், கால்களை தொங்க விடாமல், மடித்து வைத்து உட்கார்ந்து சாப்பிடலாம், ஆயினும், இறுக்கமான உடைகள், உங்களுக்கு, வேதனையை அளிப்பதுடன், உணவையும் சரியான முறையில் சாப்பிடமுடியாத அளவில் வைத்துவிடும்.

    Next Story
    ×