search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு வரும் முதுகு வலிக்கான காரணங்கள்
    X

    குழந்தைகளுக்கு வரும் முதுகு வலிக்கான காரணங்கள்

    குழந்தைகளின் முதுகு வலியின் பின்னணியில் உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கலாம். அதிலும் 4 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு முதுகு வலி வந்தால் அதிக கவனம் அவசியம்.
    குழந்தைகளுக்கு வரும் முதுகு வலி என்பது பெரியவர்களுக்கு வரும் வலியிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. குழந்தைகளின் முதுகு வலியின் பின்னணியில் உடல்ரீதியான பாதிப்புகள் இருக்கலாம். அதிலும் 4 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு முதுகு வலி வந்தால் அதிக கவனம் அவசியம்.

    முதுகு வலியுடன் கீழ்க்கண்ட அறிகுறிகளும் இருந்தால் உடனே மருத்துவரைப் பாருங்கள். காய்ச்சல் மற்றும் எடை குறைவது, சோர்வு, மரத்துப் போகிற உணர்வு, வலியானது ஒரு காலிலோ அல்லது இரண்டு காலிலோ பரவுவது, சிறுநீரகம் சம்பந்தபட்ட கோளாறுகள், தூக்கமின்மை.

    குழந்தைகளின் முதுகுவலியை உடனடியாக கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால், அது வேறு விளைவுகளை உண்டாக்கிவிடும் அபாயம் உண்டு. எனவே, உங்கள் குழந்தைக்கு 3 நாட்களுக்கு மேல் முதுகு வலி இருந்தாலோ அல்லது வலி அதிகமானாலோ உடனே மருத்துவரைப் பாருங்கள்.

    காரணங்கள்

    குழந்தை விளையாடும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் அடிபட்டதன் காரணமாகவும் முதுகு வலி வரலாம். பெரும்பாலான குழந்தைகள் தசைகளில் ஏற்படும் வலியையே முதுகு வலியாக உணர்கிறார்கள். போதுமான அளவு ஓய்வெடுப்பதன் மூலமே இந்த வலி சரியாகிவிடும். அரிதாக சில சமயங்களில் Osteoid osteoma என்கிற கட்டியின் காரணமாகவும் குழந்தைகளுக்கு முதுகில் வலி வரலாம்.

    இந்தக் கட்டியானது நடு முதுகு அல்லது அடி முதுகில் தான் வரும். வலி ஒரே மாதிரியாக இருந்துவிட்டு நாளாக ஆக அதிகரிக்கும். இதற்கு தாமதமில்லாத மருத்துவ சிகிச்சை அவசியம்.முதுகு பகுதியில் ஏதேனும் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டிருந்தாலும் வலி வரலாம். முதுகுப் பகுதியில் வீக்கம், சிவந்து போவது போன்றவையும் இருந்தால் இன்ஃபெக்‌ஷனாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும். அது உறுதி செய்யப்பட்டால் ஆன்டி பாக்டீரியா அல்லது ஆன்டி வைரல் மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.
    Next Story
    ×