என் மலர்tooltip icon

    ஆசிரியர் தேர்வு

    • ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார்.
    • நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

    உத்தரப் பிரதேசத்தில் மூடியிருந்த ரெயில்வே கேட்டைக் கடக்க முயன்ற நபர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று (அக். 13) கிரேட்டர் நொய்டாவில் தாத்ரி பகுதியைச் சேர்ந்த துஷார் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் ரெயில்வே கிராசிங்கிற்கு வந்துள்ளார்.

    ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தும், அவர் சற்றும் யோசிக்காமல் அதன் அடியில் புகுந்து தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் சறுக்கி விழுந்தது. இதனால் அவரும் கீழே விழுந்தார்.

    அப்போது வேகமாக ரெயில் வந்துகொண்டிருந்த நிலையில் அருகில் வருவதற்குள் தனது பைக்கை தூக்க முயற்சித்துள்ளார்.

    ரெயில் மிக வேகமாக நெருங்கி வருவதைக் கண்ட அவர், பைக்கை விட்டுவிட்டு ஓடித் தப்பிக்க முயன்றார். ஆனால், அதற்குள் நேரம் கடந்துவிட்டது.

    வேகமாக வந்த ரயில் அவரை பலமாக மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையின்படி, 2023-ல் நாட்டில் நடந்த 2,483 ரெயில்வே கிராசிங் விபத்துகளில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 1,025 விபத்துகளும், அதில் 1,007 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இது நாட்டிலேயே அதிகபட்ச எண்ணிக்கையாகும்.  

    • பல வருட வேதனை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு காசாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது.
    • ஒரு புதிய மற்றும் அழகான நாள் உதயமாகிறது.

    அமெரிக்க அதிபர் டொனாலடு டிரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் எகிப்து அதிபர் அப்துல் ஃபத்தா அல்-சிசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் முழு விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.

    உச்சிமாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய டிரம்ப், பல வருட வேதனை மற்றும் இரத்தக்களரிக்குப் பிறகு காசாவில் போர் முடிவுக்கு வந்துள்ளது. மனிதாபிமான உதவிகள் இப்போது தாராளமாகப் கிடைத்து வருகின்றன.

    நூற்றுக்கணக்கான லாரிகளில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் காசாவிற்குச் செல்கின்றன. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள், பிணைக்கைதிகள் குடும்பத்துடன் இணைகிறார்கள். ஒரு புதிய மற்றும் அழகான நாள் உதயமாகிறது. மறுநிர்மாண செயல்முறை இப்போது தொடங்கும்

    இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்த நிலையை அடைய நீண்ட காலம் ஆனது. நாங்கள் மிகவும் விரிவாக ஆய்வுப்பின் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்திடுகிறோம்" என்று குறிப்பிட்டார்.

    மேலும் இந்த இதை சாத்தியமாக்கிய அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு டிரம்ப் தனது நன்றியைத் தெரிவித்தார். குறிப்பாக மத்தியஸ்தர்களாக முக்கியப் பங்காற்றிய எகிப்து மற்றும் கத்தார் அரசாங்கங்களுக்கு அவர் நன்றி கூறினார்.

     இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்துகொண்டார். இந்திய அரசாங்கத்தின் சார்பாக மத்திய அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் இதில் பங்கேற்றார். 

    பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

    படம் வெளியாவதற்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில் இன்று 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

    கடந்த 10-ந் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகவில்லை. அதற்கு பதிலாக அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் இருக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டு டிரெய்லர் 13- ந் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.

    இன்று மாலை 6 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என போஸ்டர் வெளியிடப்பட்டது. பின்னர் 7 மணிக்கு வெளியாகும் என போஸ்டர் வெளியானது.

    பிறகு, பைசன் படத்தின் டிரெய்லர் இன்று இரவு 8 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது. இந்நிலையில், பைசன் பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    • டெல்லி டெஸ்டில் குல்தீப் யாதவ் 55.5 ஓவர்கள் வீசி 8 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
    • ஜடேஜா 52 ஓவர்கள் வீசி 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு அணிகளிலும் சேர்த்து நான்கு சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன.

    முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீசை இந்திய அணி பந்து வீச்சாளர்கள் எளிதாக அவுட்டாக்கிவிட்டனர். ஆனால், 2ஆவது இன்னிங்சில் கடுமையான வகையில் பந்து வீச வேண்டியிருந்தது.

    இந்திய பந்து வீச்சாளர்கள் 118.5 ஓவர்கள் வீசினர். சுழற்பந்து வீச்சாள்கள் 95 ஓவர்கள் வீசி 5 விக்கெட் வீழ்த்தினர். பும்ரா, சிராஜ் ஆகியோர் முறையே 3, 2 என 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    முதல் இன்னிங்சில் 8 விக்கெட் வீழ்த்திய நிலையில், 2ஆவது இன்னிங்சிலா் 5 விக்கெட்டுதான் கிடைத்தது.

    குல்தீப் யாதவ் 55.5 ஓவரில் 186 ஓவர்கள் வீசி 8 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 36 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டும், ஜடேஜா 52 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    சுழற்பந்து வீச்சுக்கு சவாலான இந்த ஆடுகளத்தில், குல்தீப் யாதவ் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால் கூடுதலாக விக்கெட் வீழ்த்தினார் என்று வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது:-

    குல்தீப் யாதவ் உண்மையிலேயே நன்றாக பந்து வீசினார் என்று நினைக்கிறேன். அவர் மிகவும் சிறப்பான சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்தார். அவர் ரிஸ்ட் ஸ்பின்னர் என்பதால், இங்கே சற்று கூடுதலாக அறுவடை செய்துள்ளார். இங்கு உண்மையிலேயே உதவியதாக இருந்தது.

    எல்லா பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் கூட தைரியமாக வீசினார். ஆகவே, இந்த ஆடுகளத்தில் 20 விக்கெட் வீழ்த்தியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 

    • இஸ்ரேல்- காசா ஒப்பந்தத்தால் ஹமாஸிடம் இருந்து பிணைக்கைதிகள் விடுவிப்பு.
    • டிரம்பின் உண்மையான முயற்சிக்கு ஆதரிப்பதாக பிரதமர் மோடி பதிவு.

    இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டு, உயிரோடு இருந்த 20 பிணைக்கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுவித்தது.

    இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்ட அனைத்து பணயக்கைதிகளின் விடுதலையையும் நாங்கள் வரவேற்கிறோம். அவர்களின் விடுதலை அவர்களின் குடும்பங்களின் தைரியத்திற்கும், அமெரிக்க அதிபர் டிரம்பின் அசைக்க முடியாத அமைதி முயற்சிகளுக்கும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் உறுதியான உறுதிக்குமான காணிக்கை.

    பிராந்தியத்தில் அமைதியைக் கொண்டு வருவதற்கான ஜனாதிபதி டிரம்பின் உண்மையான முயற்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    • இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    • பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், டிரம்ப் இஸ்ரேல் சென்றிருந்தார்.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.

    அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் உறுப்பினர் உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று புகழாரம் சூட்டினர்.

    அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு உறுப்பினர்கள் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர். பின்னர் டிரம்ப் தொடர்ந்து உரையாற்றினார்.

    ஐமென் ஓடே மற்றும் ஓஃபர் காசிஃப் அகிய இரண்டு உறுப்பினர்கள்தான் கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் இனப்படுகொலை என எழுதப்பட்டிருந்த பதாகையை தூக்கிபிடித்திருந்தார்.

    • அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணைய விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.
    • அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

    கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இது தொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், நீதிபதிகளின் உத்தரவு முழு விவரம் வெளியாகியுள்ளது.

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் "சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், சிறப்பு புலன் விசாரணைக்குழு அல்லது ஒருநபர் ஆணைய விசாரணை நியமனம் செய்யப்பட்டிருந்தா், அது நிறுத்தி வைக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழக அரசு அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணைய விசாரணை குழுவை அமைத்துள்ளது.

    அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, இந்த குழு விசாரணை நடத்தி வந்தது.

    • பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் வரும் என போலீசார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.
    • கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    * ஒரு வார காலம் விடுமுறை என்பதால் நீதித்துறையை நாட முடியாத சூழல் ஏற்பட்டது.

    * நீதித்துறை, போலீஸ், ஊடகங்களை அணுக முடியவில்லை.

    * பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அனுமதி கேட்டபோது கலவரம் வரும் என போலீசார் கூறியதால் தான் கரூருக்கு மீண்டும் செல்லவில்லை.

    * கரூர் கூட்டநெரிசலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை தத்தெடுக்க விஜய் முடிவு செய்துள்ளார்.

    * கரூரில் என்ன நடந்தது என்பது குறித்த விரிவாக அறிக்கை த.வெ.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநில அரசின் குழு விசாரணை நடத்தினால் த.வெ.க. மீது தான் தவறு என கூறுவார்கள்.
    • த.வெ.க.விற்கு ஆதரவாக இருந்து யூடியூபர்கள், த.வெ.க. வலைதள நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.

    இந்நிலையில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

    * ஒருநபர் ஆணைய விசாரணை தொடங்கிய நிலையில் தமிழக அரசின் உயரதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

    * அரசு தரப்பு நியாயத்தை மட்டும் உள்துறை செயலர் பேசியது ஏன்?

    * த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக ஐகோர்ட் கடுமையான வார்த்தைகளை கூறியது.

    * விசாரணையே இல்லாமல் த.வெ.க. மீது தான் தவறு என்பது போல் ஐகோர்ட் உத்தரவிட்டது.

    * எங்களுக்கு வழக்கறிஞர்கள் கிடைக்கக்கூடாது என்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்தன.

    * மாநில அரசின் குழு விசாரணை நடத்தினால் த.வெ.க. மீது தான் தவறு என கூறுவார்கள்.

    * த.வெ.க.விற்கு ஆதரவாக இருந்து யூடியூபர்கள், த.வெ.க. வலைதள நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    * த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றனர். த.வெ.க.வை முடக்க முயற்சிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
    • பணயக் கைதிகளின் குடும்பத்தினரை டிரம்ப் சந்திக்கிறார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.

    ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார்.

    இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அங்கிருந்து எகிப்து செல்கிறார்.

    இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "போர்களைத் தீர்ப்பதில் சிறந்தவன் நான். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே போர் நடப்பதாக கேள்விப்பட்டேன். மத்திய கிழக்கு பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பியதும், அதையும் நிறுத்துவேன். காசா போர் என்பது நான் தீர்த்து வைத்த 8வது போராகும்" என்று தெரிவித்தார்.

    • ஜான் கேம்பல் 115 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
    • முதல் சதம் அடிக்க அதிக இன்னிங்ஸ்கள் எடுத்த கொண்ட வீரர்கள் பட்டியலில் கேம்பல் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 248 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் பால் ஆன வெஸ்ட் இண்டீஸ் அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் அணி பறிகொடுத்தது. இதனையடுத்து தொடக்க வீரர் ஜான் ஜாம்பெல் மற்றும் சாய் ஹோப் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜான் கெம்பல், டெஸ்டில் தனது முதலாவது சத்தை பதிவு செய்தார்.

    இதன்மூலம் இந்தியாவுக்கு எதிராக 19 ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

    கடைசியாக 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் டேரன் கங்கா இந்தியாவிற்கு எதிராக சதமடித்திருந்தார்.

    மேலும் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்ய அதிக இன்னிங்ஸ்கள் எடுத்த கொண்ட வீரர்கள் பட்டியலில் இவர் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டிரெவோர் கொடாட் உள்ளார். இவர் முதல் சதத்தை பதிவு செய்ய 58 இன்னிங்ஸ்கள் எடுத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது

    கரூரில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக்கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    சென்னை ஐகோர்ட்டு தனி நீதிபதி, கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை குழு அமைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த மனு, நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக போலீசை மட்டும் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட வேண்டும் என்று தவெக தரப்பு வலியுறுத்தியது.

    இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. 

    இது இடைக்கால உத்தரவு மட்டுமே என்று தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    விசாரணை குழுவில் 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். எனினும் அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக இருக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    ×