என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல்: SIT மற்றும் ஒருநபர் ஆணைய விசாரணை நிறுத்திவைப்பு: உச்சநீதிமன்றம்
- அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணைய விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.
- அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இது தொடர்பான மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், நீதிபதிகளின் உத்தரவு முழு விவரம் வெளியாகியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் "சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதால், சிறப்பு புலன் விசாரணைக்குழு அல்லது ஒருநபர் ஆணைய விசாரணை நியமனம் செய்யப்பட்டிருந்தா், அது நிறுத்தி வைக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணைய விசாரணை குழுவை அமைத்துள்ளது.
அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, இந்த குழு விசாரணை நடத்தி வந்தது.






