search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகக்கோடு புனித அந்தோணியார் ஆலய திருவிழாநாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    நாகக்கோடு புனித அந்தோணியார் ஆலய திருவிழாநாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • பெருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.

    குலசேகரம் நாகக்கோடு புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப பெருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருவிழா கொடியேற்றம் தொடர்ந்து புனித தேவசகாயம் சொரூபம் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதைதொடர்ந்து வெட்டுவெந்நி திருத்தல அதிபர் அந்தோணிமுத்து தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றுகிறார். முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா அதிபர் டோமினிக் கடாட்சதாஸ் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 9-ம் நாள் காலையில் நோயில் பூசுதல் சிறப்பு திருப்பலியை அருட்பணியாளர் குலசை பெலிக்ஸ் நிறைவேற்றுகிறார். மாலையில் திண்டுக்கல் அருட்பணியாளர் ஸ்டீபன், மேல்புறம் பங்குதந்தை ஆல்வின் விஜய் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

    விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி குழித்துறை சமூக சேவைகள் நிர்வாக இயக்குனர் அருட்பணியாளர் ஜாண் மைக்கேல் ராஜ், சென்னை குட்வில் கம்யூனிகேஷன் அருட்பணியாளர் ஜெகத் கஸ்பார் ஆகியோர் இணைந்து குடும்ப பெருவிழா நிறைவு ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார்கள். தொடர்ந்து கொடியிறக்கம், அன்பின் விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சவுந்தர்நாதன், பங்கு அருட்பணியாளர் பேரவை துணை தலைவர் ராஜன், செயலாளர் புஷ்பராணி, பொருளாளர் சுசீலன், துணை செயலாளர் ஜெயராஜேஷ் மற்றும் அருட்பணி பேரவை உறுப்பினர்கள், திருவழிபாட்டுக்குழு, மறைக்கல்வி மன்றம், பக்த சபை இயக்கங்கள், அன்பியங்கள், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×