search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
    X

    பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தல பெருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது

    • இந்த விழா பிப்ரவரி 12-ந் தேதி வரை நடக்கிறது.
    • தினமும் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்கி பிப்ரவரி 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை)இத்தாலியில் உள்ள பதுவா நகரில் இருந்து கொண்டு வரப்படும் புனித அந்தோணியாரின் திருப்பண்டம் அமைவிடம் மந்திரிப்பு நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு கல்லறைத்தோட்டம் மந்திரிப்பு, 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து புத்தன்துறை பங்குத்தந்தை வில்சன் தலைமையில் ராஜாக்கமங்கலம்துறை இணைப் பங்கு தந்தை அனில் ஜோசப் மறையு ரையாற்றுகிறார்.

    நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசேரன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    விழாவையொட்டி தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி மற்றும் அருட்பணியாளர்களின் மறையுரை போன்றவை நடக்கிறது.

    11-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு திருவிழிப்பு நற்செய்தி கொண்டாட்டம் போன்றவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 12-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 11 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு குளச்சல் வட்டார முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் டி சேல்ஸ் தலைமை தாங்குகிறார். கேசவன்புத்தன்துறை பங்குத்தந்தை எஸ்.பி. லாரன்ஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பென்னோ ராஜ், திருத்தொண்டர் ருடால்ப் சங்கீத் மற்றும் பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×