search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • திருவிழா 26-ந்தேதி தொடங்கி ஜூன் 4-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    வில்லுக்குறி அருகே உள்ள அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(ஜூன்) 4-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான 26-ந்தேதி மாலையில் 6.30 மணிக்கு நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ரபேல் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். முன்னதாக கல்லறை மந்திரித்தல், தேமானூர் பங்குதந்தை ஆல்பின் ஜூடு தலைமையில் வாழ்வச்சகோஷ்டம் பங்குதந்தை அஜின் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 30-ந்தேதி முளகுமூடு வட்டர முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

    9-ம் நாளான வருகிற 3-ந்தேதி காலை 7 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறர். நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் எக்கர்மன்ஸ் மைக்கேல் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ராயப்பன் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். கோட்டார் மறைமாவட்ட போதை மறுவாழ்வு மைய அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதிநாளான 4-ந்தேதி காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி முன்னாள் ஆயர் இவான் அம்புறோஸ் தலைமை தங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் அன்பின் விருந்து, மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை சுரேஷ் பாபு ஓ.சி.டி., பங்கு பேரவை துணைத்தலைவர் மரிய ஆன்றனி, செயலாளர் புஷ்பலதா, துணை செயலாளர் லீமாறோஸ், பொருளாளர் மரிய செபஸ்தியான் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

    Next Story
    ×