என் மலர்

  வழிபாடு

  வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்.
  X
  வானில் வர்ணஜாலம் காட்டிய பட்டாசுகள்.

  சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா: ஒரு மணிநேரம் இடைவிடாமல் நடந்த வாண வேடிக்கை நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வண்ண மின் விளக்குகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கு நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பின்னர் பத்திர காளியம்மன் கோவிலை வந்தடைந்தது.
  சிவகாசி பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 3ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடைபெற்றது. விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  9வது நாள் திருவிழாவான நேற்று இரவு முக்கிய நிகழ்வுகளான அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் பத்திர காளியம்மன் பவனி வரும் நிகழ்வு நடைபெற்றது. வண்ண மின் விளக்குகள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கு நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பின்னர் பத்திர காளியம்மன் கோவிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்ட விழாவில் பறவை காவடி எடுத்தும் அக்கினி சட்டி எடுத்தும் பக்தர்கள் நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு பொங்கல் வைத்தும் சிறப்பு வழிபாடு செய்தனர்.

  திருவிழாவையொட்டி சிவகாசி நகருக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு உள்ளிட்ட அனைத்து ஆலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விழாவில் சிவகாசி, திருத்தங்கல் மற்றும் பல்சுவேறு கிராமத்தினரும் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×