search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கல்லக்குடி கோதண்டராமர் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்
    X
    கல்லக்குடி கோதண்டராமர் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்

    கல்லக்குடி கோதண்டராமர் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்

    கல்லக்குடி கோதண்டராமர் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவத்தையொட்டி ஸ்ரீராமர் ஒரே நாளில் 9 வாகனங்களில் கோவிலை சுற்றி திருவீதி உலா நடைபெற்றது.
    கல்லக்குடி டால்மியா சிமெண்டு ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ஆண்டுதோறும் ஏகதினபிரமோற்சவத்தையொட்டி சாமி திருவீதி உலா நடைபெறும்.

    அதன்படி நேற்று முன்தினம் பிரம்மோற்சவத்தையொட்டி ஸ்ரீராமர் ஒரே நாளில் 9 வாகனங்களில் கோவிலை சுற்றி திருவீதி உலா நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 8.15 மணிக்கு சேஷ வாகனத்திலும், 9.15 மணிக்கு இந்திர விமான வாகனத்திலும், 10.45 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், 12 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 3.30 மணிக்கு சிம்ம வாகனத்திலும், 4.45 மணிக்கு குதிரை வாகனத்திலும், 6 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும், இரவு 7.15 மணிக்கு கருட வாகனத்திலும் சாமி கோவிலை சுற்றி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.
    Next Story
    ×