search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் மண்டபம் கட்ட கல் நடும்விழா
    X
    முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் மண்டபம் கட்ட கல் நடும்விழா

    முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் மண்டபம் கட்ட கல் நடும்விழா

    சிங்கம்புணரி அருகே முறையூரில் உள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடை பெற்று வருகிறது.
    சிங்கம்புணரி அருகே முறையூரில் பிரசித்தி பெற்ற மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. இங்கு கும்பாபிஷேக பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடை பெற்று வருகிறது. இதில் கிழக்குப் புறமாக ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் ஒன்றும் தெற்கு புறமாக 3 நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் ஒன்றும் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.

    மேலும் கிழக்கு புறம் ராஜ கோபுரத்திற்கு முன்பு 16 கல் தூண் மண்டபம் கட்டுவதற்கு ஊராட்சி தலைவர் சுரேஷ் மூலம் ரூ.70 லட்சம் செலவில் பணிகள் தொடங்கியது. நேற்று கல்தூண் நிறுத்தும் நிகழ்ச்சி நடை பெற்றது. முன்னதாக கோவில் குருக்கள் சுரேஷ் தலைமையில் கல்தூணுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்று தீபாராதனை காட்டப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ஊர் அம்பலக்காரர் விசுவநாதன் தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி தலைவர் சுரேஷ் குடும்பத்தினர் ஒன்றிய கவுன்சிலர் சத்தியமூர்த்தி மற்றும் பெரிய சாமியாடி சொக்கநாதன் செல்வம், சாமியாடி சந்திரசுவாமி மற்றும் கோவில் கண்காணிப்பாளர் மாணிக்கம் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×