என் மலர்

  வழிபாடு

  கருட சேவை
  X
  கருட சேவை

  நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கல்கருட சேவை பக்தர்கள் இன்றி நடந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் கோவிலில் கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளினார்.
  நாச்சியார்கோவிலில் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுக்கு இருமுறை பங்குனி பெருவிழா மற்றும் முக்கோடி தெப்ப திருவிழாவின் போது கல்கருட சேவை நடைபெறுவது வழக்கம். அதன்படி முக்கோடி தெப்பத்திருவிழாவையொட்டி கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

  விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள், தாயார் உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை கருடசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கருடபகவான் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளினார்.

  ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி கல்கருட சேவை நடந்தது. இதில் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

  Next Story
  ×