என் மலர்

  வழிபாடு

  பகவதியம்மன்
  X
  பகவதியம்மன்

  பரமத்திவேலூர் பேட்டையில் பகவதியம்மன் கோவில் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள ‌பகவதி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள ‌பகவதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். பின்னர் அங்கிருந்து தீர்த்தக்குடங்களுடன் பக்தர்கள் புறப்பட்டு ஊர்வலமாக பகவதி அம்மன் கோவிலை வந்தடைந்தனர்.

  காலை 11 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு அலங்காரம் மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் சுற்று வட்டாரப்பகுதிகளை சேர்ந்த பெண் பக்தர்கள் கலந்து கொண்டு பகவதியம்மனுக்கு சுற்றுப்பொங்கல் வைத்து வழிபட்டனர்.

  தொடர்ந்து பொங்கல், மா விளக்கு படையலிட்டு பெண்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவையொட்டி, பகவதியம்மனுக்கு சிறப்பு பூ பந்தல் அமைக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவத்தில் பகவதியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்‌குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×