search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சக்தி முனியப்பன் கோவில் திருவிழா
    X
    சக்தி முனியப்பன் கோவில் திருவிழா

    சக்தி முனியப்பன் கோவில் திருவிழா: ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் வழிபாடு

    சக்தி முனியப்பன் கோவில் திருவிழாவில் ஆடு, கோழி மற்றும் பன்றி பலியிட்டு முப்பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    தர்மபுரி குமாரசாமிப்பேட்டை பென்னாகரம் ரோடு ரெயில்வே கேட் அருகே உள்ள ஸ்ரீ சக்தி முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி முனியப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் ஆடு, கோழி மற்றும் பன்றி பலியிட்டு முப்பூஜை நடந்தது. இதைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    மேலும் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு வழிபட்டனர். விழாவையொட்டி குமாரசாமிப்பேட்டை மகாமாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க சீர் வரிசை கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சக்தி முனியப்பன் கோவிலை வந்தடைந்தது.

    அங்கு சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடந்தது. பின்னர் சாமிக்கு மகா தீபாராதனையும், அன்னதானம் வழங்கும் விழாவும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×