என் மலர்

  வழிபாடு

  திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் தேவார பாராயண நிகழ்ச்சி
  X
  திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் தேவார பாராயண நிகழ்ச்சி

  திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் தேவார பாராயண நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவிடைமருதூர் மகாலிங்கசாமி கோவிலில் தேவார பாராயண நிகழ்ச்சியில் ஓதுவார்கள் தேவாரம், பன்னிரு திருமுறை பதிகங்களை பாடி வீதி உலா வந்தனர்.
  கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் உள்ள பெருநலமா முலையம்மை உடனாகிய மகாலிங்கசாமி கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஓதுவார்கள் ஒன்று கூடி தேவார பாராயண நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

  அதன்படி நேற்று தேவார பாராயண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஓதுவார்கள் தேவாரம், பன்னிரு திருமுறை பதிகங்களை பாடி வீதி உலா வந்தனர். படித்துறை விநாயகர் சன்னதியில் இருந்து வீதி உலா தொடங்கியது. இதில் ஓதுவார் சிவக்குமார் தலைமையில் ஆலவாய் அண்ணல் தேவார பாடசாலை மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

  திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் முன்னிலை வகித்தார். முத்துக்குமார் ஓதுவார், ஆலய ஓதுவார் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
  Next Story
  ×