என் மலர்

  ஆன்மிகம்

  அய்யா வைகுண்டசாமி
  X
  அய்யா வைகுண்டசாமி

  அரசம்பதி அய்யா வைகுண்டசாமி பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா இன்று தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பொற்றையடி அருகே உள்ள அரசம்பதியில் அய்யா வைகுண்டர்சாமி பதி உள்ளது. இங்கு திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழழை) தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது.
  பொற்றையடி அருகே உள்ள அரசம்பதியில் அய்யா வைகுண்டர்சாமி பதி உள்ளது. இங்கு திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழழை) தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 4 மணிக்கு சரவிளக்கு பணிவிடை, மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பு ஆகியவை நடக்கிறது. திருஏடு வாசிப்பை அன்பாலயம் நிறுவனர் சிவச்சந்திரன் தொடங்கி வைக்கிறார். இரவு 9 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, அன்னதானம் ஆகியவை நடைபெறும். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் பணிவிடை, திருஏடு வாசிப்பு போன்றவை நடக்கிறது.

  15-ம் நாள் விழாவில் அய்யா வைகுண்ட சாமியின் திருக்கல்யாண ஏடு வாசிப்பும், சுருள் படைத்தலும், இரவு 8 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு சாமிதோப்பு பதியின் வடக்கு வாசலில் இருந்து முத்திரி பதம் எடுத்து, பெண்கள் சுருள்தட்டு ஏந்தி மேளதாளங்கள் முழங்க அரசம்பதி நோக்கி ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9 மணிக்கு அய்யாவழி அருளிசைப்புலவர் சிவச்சந்திரனின் அருள் இசை வழிபாடும் நடைபெறுகிறது.
  Next Story
  ×