search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சாய்பாபா
    X
    சாய்பாபா

    பிள்ளைச்சாவடி சாய்பாபா கோவிலில் ஆராதனை விழா

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    சீரடி சாயிபாபாவின் 102 வது சமாதி தினத்தை முன்னிட்டு பிள்ளைச்சாவடி சாயிபாபா ஆலய நிர்வாகம் சார்பில், புதுவை மத்திய பல்கலைக்கழகம் எதிரில் உள்ள சாயி பாபா கோவிலில் நாளை(வெள்ளிக்கிழமை) ஆராதனை விழா நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கொடியேற்றமும், தொடர்ந்து 108 பன்னீர் கலச அபிஷேகமும், இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு பல்லக்கு உற்சவம், 12 மணிக்கு ஆரத்தியும் நடைபெறும்.

    தொடர்ந்து பகல் 1.45 மணிக்கு சாயி சத்சரித பாராயணம், பிற்பகல் 2.30 மணிக்கு சாயி பக்தர்களால் எழுதப்பட்ட சீரடி சாயிபாபாவின் நாமாவளி புத்தகங்கள் பூமிக்கு அர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி, மாலை 4 மணிக்கு பஜனை, மாலை 6 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 8 மணிக்கு ஆரத்தியும் நடைபெறுகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஆகிய அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    Next Story
    ×