search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஏடு எதிர் ஏறிய திருவிழா
    X
    ஏடு எதிர் ஏறிய திருவிழா

    திருவேடகத்தில் ஏடு எதிர் ஏறிய திருவிழா

    வைகைஆற்று கரையில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதியில் இருந்து வாழ்க அந்தணர் என்ற வாசகம் பொறித்த செப்புத் தகட்டில் உள்ள ஏடு கேடயத்தில் அலங்காரமாகி வைகையாற்றில் படித்துறைக்கு வந்து சேர்ந்தது.
    சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் ஏலவார் குழலிஅம்மன் சமேத ஏடகநாதர்சாமி கோவில் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று ஏடு எதிரேறிய திருவிழா நடைபெறும். தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக திருவிழா பக்தர்கள் இல்லாமல் மிக எளிமையாக நடைபெற்றது. நேற்று மாலை வைகைஆற்று கரையில் உள்ள திருஞானசம்பந்தர் சன்னதியில் இருந்து வாழ்க அந்தணர் என்ற வாசகம் பொறித்த செப்புத் தகட்டில் உள்ள ஏடு கேடயத்தில் அலங்காரமாகி வைகையாற்றில் படித்துறைக்கு வந்து சேர்ந்தது.

    இங்கு ஓதுவார் பாலமுருகன் தல வரலாறும், ஏடு எதிரேறிய வரலாறும் பக்தி பாடலுடன் எடுத்துக்கூறினார்.பின்னர் வைகை ஆற்று வெள்ளத்தில் ஏடு எதிர் ஏறுவது போல் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் பூஜைகள் நடந்து பிரசாதம் வழங்கினர். விழாவில் கோவில் செயல் அலுவலர் இளஞ்செழியன், பரம்பரைஅறங்காவலர் சேவுகன்செட்டியார், கோவில்பணியாளர்கள் மற்றும் பிரதோஷம் கமிட்டியினர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×