search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஜெனகை மாரியம்மன் கோவில்
    X
    ஜெனகை மாரியம்மன் கோவில்

    ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு குவிந்த பக்தர்கள்: சூடம் ஏற்றி வழிபட்டனர்

    மூடப்பட்ட் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக வாழைப்பழம், வெற்றிலைபாக்கு, மஞ்சள், விபூதி, குங்குமம், திருமாங்கல்யத்தை வைத்து சூடம் ஏற்றி பக்தர்கள் வேண்டிக் கொண்டனர்.
    ஆடிப்பெருக்கை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பாக பக்தர்கள் குவிந்தனர். கோவில் மூடப்பட்டிருந்ததால் கோவிலின் முன்பாக வாழைப்பழம், வெற்றிலைபாக்கு, மஞ்சள், விபூதி, குங்குமம், திருமாங்கல்யத்தை வைத்து சூடம் ஏற்றி கொரோனா 3-வது அலையால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்று வேண்டிக் கொண்டனர்.

    பெண்கள் மனம் உருகி பக்தி பாடல்கள் பாடினர். கோவில் முன் கதவு திறக்கப்படாமல் ஆகம விதிப்படி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. சோழவந்தான் வைகை ஆற்றில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று அதிகாலையில் பெண்கள் நீராடி பூஜைகள் செய்தனர். பின்னர் கூழ் காய்ச்சி வழங்கினர்.
    Next Story
    ×