search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    செங்கழுநீர் மாரியம்மன்
    X
    செங்கழுநீர் மாரியம்மன்

    செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    அரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் 107-வது ஆண்டு செடல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    அரியாங்குப்பம் செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் 107-வது ஆண்டு செடல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 5 மணிக்கு நோணாங்குப்பம் சங்கராபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் மற்றும் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட மின் தேரில் அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 16-ந்தேதி அம்மனுக்கு செடல் தேரோட்ட உற்சவ விழா நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர், இளைஞர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×