
தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும், மலர் அலங்காரம், அபிஷேகங்களும், தீபாராதனைகளும் பொங்கல் வைத்து வழிபாடும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அம்மனுக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், கரகம், மாவிளக்கு, குழந்தை வரம் பெற்றவர்கள், கரும்பு தொட்டிலுடன் வந்து நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் நடைபெற்றது.
இன்று (செவ்வாய்க்கிழமை) மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் கொடிமரம் இறக்கி முளைப்பாரி தண்ணீரில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது. இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. முன்னதாக கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பாலமேடு இந்து நாடார் உறவின்முறை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.