search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஈரோடு கோட்டை பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா
    X
    ஈரோடு கோட்டை பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா

    ஈரோடு கோட்டை பெரியபாவடி ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழா

    ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் குண்டம் விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர்.
    ஈரோடு கோட்டை பெரியபாவடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஓங்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் மற்றும் பொங்கல் விழா கடந்த மாதம் 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதையடுத்து 1-ந் தேதி இரவு 9 மணிக்கு பூச்சாட்டப்பட்டது. 2-ந்தேதி மாலை 6 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    3-ந் தேதி இரவு 8 மணிக்கு அக்னி கபாலமும், நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு விளக்கு பூஜையும், ஊஞ்சல் சேவையும், இரவு 9 மணிக்கு குண்டம் பற்ற வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.


    முக்கிய நிகழ்ச்சியான குண்டம் மற்றும் பொங்கல் விழா நேற்று நடந்தது. முன்னதாக காலை 6 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து கோவில் பூசாரி குண்டம் இறங்கினார். அவரை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். இதையொட்டி ஓங்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பின்னர் கோவில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இதைத்தொடர்ந்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மனின் திருவீதி உலா நடந்தது. இன்று (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு மறு அபிஷேகமும் நடைபெறுகிறது.
    Next Story
    ×