
இங்கு ஆண்டு தோறும் காவடி உற்சவம் நடைபெறும். அந்த வகையில் நேற்று காவடி உற்சவம் நடைபெற்றது. இதில் கிராமத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் குளக்கரையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அங்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.