
செயலாளர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.பொருளாளர் தங்கவேல், செஞ்சேரிமலை அப்புக்குட்டி ஆகியோர் வரவேற்றனர்.காலை 8 மணிக்கு சமய கொடியேற்றுதல் தொடங்கியது. 8.30 மணிக்கு திருநீலகண்ட நாயனாருக்கும் அம்மையாருக்கும் அபிஷேகம் அலங்காரம், 11.30மணிக்கு மகா தீபாராதனை, மகேஸ்வர பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 12.30 மணிக்கு அடியார்களுக்கு திருவமுதுடன் திருவோடு வழங்குதல், 12.45 மணிக்குஅன்னதானம் நடைபெற்றது.
விழாவில், உதவிச் செயலாளர் கோபால்சாமி, கே.தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவரும்,சமூக இடைவெளி கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து பங்கேற்றனர். முடிவில், விழாவில், பங்கேற்ற அனைவருக்கும் சுவாமியின் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக, கடந்த 48-ம்ஆண்டின் வரவு, செலவு விவரம் சமர்ப்பிக்கப்பட்டது.